சென்னை, ஜூன், வாக்ஸ் குழுமத்தின் 17 வது நிறுவனர் தின விழா சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள வாக்ஸ் விருச்சம் வளாகத்தில் நடைபெற்றது.இதில் வாக்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமான வாக்ஸ் அறக்கட்டளையின் சார்பாக ஆதரவற்ற மற்றும் கண் பார்வை இழந்த மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு கல்வி பயில்வதற்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
வாக்ஸ் குழுமத்தின் நிறுவனர் ஞானசுந்தரம் அவர்களின் நினைவை போற்றும் வகையில் குழுமத்தின் தலைவர் ராவணன் ஞானசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருமான வரி துறையின் கூடுதல் இயக்குனர் செந்தில் வேலவன் ஐ .ஆர் .எஸ் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி சோலை அய்யர், சிப்காட் பொது மேலாளர் வீரபத்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆதரவற்ற மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு கல்விக்கான நிதி உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளின் தாயகம் என்ற அமைப்பிற்கு ஸ்ரீபெரும்புதூரில் 4875 சதுர அடி அளவிலான நிலத்தை நன்கொடையாக வழங்கினர்.
மேலும் மறைந்த ஞானசுந்தரம் அவர்களின் சுய சரிதையை விவரிக்கும் விதமாக ” நிழலாடும் நினைவுகள் ” என்ற தலைப்பிலான புத்தகத்தின் இரண்டாம் பதிப்பும் வெளியிடப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வின் போது வாக்ஸ் குழுமத்தின் இயக்குனர்கள் கவிதா ராவணன் மற்றும் இந்திரஜித் ராவணன் ஆகியோர் 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவுகள் மற்றும் வேட்டி சேலைகளை வழங்கினர்