அன்னை தெரசா சார்ட்டபிள் டிரஸ்டபில் சார்பில் அன்னை தெரசா அவர்களின் 24வது நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை எளியோருக்கு உதவிகள் வழங்கப்பட்டது

அன்னை தெரசா சார்ட்டபிள் டிரஸ்டபில் சார்பில் அன்னை தெரசா அவர்களின் 24வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

 

பின்னர் 200க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மேலும் அன்னை தெரசா ஆட்டோ சங்கத்தில் இறந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிதி உதவிக்கான காசோலையை நிறுவனர் ஜி கே தாஸ் வழங்கினார்’. இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் டி.வி. சேவியர் .சிவாஜி நாதன்,ஸ்டீபன், பாண்டியராஜன், சுப்பிரமணியம், விவேகானந்தன், A. சேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.