காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு பாக்ஸிங் அசோஸியசன் சார்பில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைப்பெற்றது.
இந்த போட்டியில் இந்தியாவிலுள்ள தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான, மனிப்பூர், டில்லி, மகாராஷ்டிரா, மத்தியபிரதேஷ் உள்ளிட்ட 36 மாநிலங்களில் இருந்து 750 பேர் கலந்துக்கொண்டனர், அதில் பெண்கள் பிரிவி 350 பேரும் ஆண்கள் பிரிவில் 400 பேரும் என மொத்தம் 750 பேர் கலந்துக்கொண்டனர்.
கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியின் இறுதி கட்ட போட்டிகள் இன்று நடைபெற்றது,இதில் முதல் பரிசினை சர்வீஸஸ்(அகில இந்திய பாக்ஸிங் பெடரேஷன்) வீரர்கள் தட்டிச்சென்றனர்.இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை ஹரியானா,மத்தியபிரேதசம் மாநிலங்களை சார்ந்த வீர வீராங்கனைகள் பெற்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு குத்துச்சண்டை கழக தலைவர் பொன்.பாஸ்கரன்,ஹேமந்த்குமார் கலாட்டா ஆகியோர் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.