74வது சுதந்திர தின விழாவையொட்டி, மணலி பகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மாநிலத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர் பாலமுருகன் உத்தரவின் பேரில் மணலி பகுதி தலைவர் ராஜேஷ் தலைமையில் மரக்கன்றுகள் நடுதல், சமூக தொண்டாற்றியவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அத்திக்குழுவினர் கலந்து கொண்டனர்.
மற்றும் நிர்வாகிகள் ஜெய், சரண், விக்கி, செந்தில், இராமன், கோகுல், கிருஷ்ணா, மணி, சேதுபதி மற்றும் அப்பகுதி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைவர் ராஜேஷ் அவர்கள், அடுத்த ஆண்டு 75வது சுதந்திர தினத்துக்குள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து இடங்களிலும்
10,000 மரக்கன்றுகள் நற்று முடிப்பதாக அறிவித்தார்.