தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டுமென கிறிஸ்தவ கூட்டமைப்பினர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை


அகில இந்திய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் தலைவர் மோகன்தாஸ் சென்னை அமைந்தகரையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்

கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் வைரஸை கட்டுப்படுத்த முதல்வர் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நன்றி தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர்

ஜூன் 8 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் மேலும் வழிபாட்டுத் தலங்களில் முக கவசம் வழங்குவது தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்

பேட்டி ;- மோகன்தாஸ் (அகில இந்திய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் தலைவர்)