லிம்கா சாதனை முயற்சி – ( Women on wheels ) அகில பாரத தேராபந்த் மகளிர் மன்றம் மகளிர் தின கொண்டாட்டம்


 

அகில பாரத தேராபந்த் மகளிர் மன்றம் மற்றும் சென்னை தேராபந்த் மகளிர் மன்றம் சார்பாக, மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து (Women on wheels) இருச்சக்கர மகளிர் தின விழிப்புணர்வு பேரணி பெரம்பூர் – புளியந்தோப்பு நார்த் டவுன் குடியிருப்பில் தொடங்கி மேட்டுப்பாளையம் சந்திப்பு, ஓட்டேரி சந்திப்பு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு சந்திப்பு ,புளியந்தோப்பு வழியாக தேராபந்த் பள்ளி வளாகத்தில் இறுதியாக முடிவுற்றது.

நிகழ்ச்சியில் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த்ராவ், இந்த அமைப்பின் அகில இந்திய கன்வீனர் யாஷிகா கடேர் , மற்றும் சமூக சேவைக்கு கிருஷ்ணவேணி, அனிதா, லலிதாஜாங்டா , ஜைன் மத பெரியோர்கள் , 300 மேற்பட்ட மகளிர் தன்னார்வலர்கள் ( Women on wheels ) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

லக்னோவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அகில பாரத தேராபந்த் மகிளா மண்டல் அமைப்பு , சென்னையிலும் தனது கிளையை நிர்வகித்து வருகிறது . இந்தியா முழுவதும் 7000 க்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்களை கொண்ட அகில பாரத தேராபந்த் மகிளா மண்டல் அமைப்பில் சென்னையில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இந்த மகளிர் தினத்தை அகில பாத தேராபந்த் மகளிர் மண்டல் அமைப்பு ஒரே சமயத்தில் இந்தியா முழுவதும் 420 கிளைகளிலும் 7000 க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று , இந்தி கழ்ச்சி “லிம்கா சாதனை பட்டியல் ” புத்தகத்தில் இடம் பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தகதாகும்.