அமேஸான் பிரைம் வீடியோ – COMICSTAAN SEMMA COMEDY PA – நிகழ்ச்சியை ஸ்ட்ரீம் செய்வதற்கான 5 காரணங்கள்

ஒரு நல்ல சிரிப்புக்கான மனநிலையில் நீங்கள் இருக்கும்போது, அமேஸான் பிரைம் வீடியோ எப்போதும் அதற்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நிச்சயம் கொண்டிருக்கும். அமேஸான் ஒரிஜினல் சீரிஸ் Comicstaanனின் தமிழ் தழுவலின் வழியாக, தற்போது ஒரு உள்ளுர் வழங்குதலும் அதில் இணைந்துள்ளது! Comicstaan Semma Comedy Pa நிகழ்ச்சியின் ட்ரெய்லரை நீங்கள் இதுவரை பார்க்கவில்லை என்றால், செப்டம்பர் 11 முதல், எட்டு-அத்திாயங்களைக் கொண்ட, இந்த தொடர்-பார்த்தலுக்குத் தகுதியான ஸ்கிரிப்ட் செய்யப்படாத நிகழ்ச்சியை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள்

கீழ்காணுமாறு:

 • தமிழில் முதல் ஸ்கரிப்ட் அற்ற அமேஸான் அசல் தொடர்
  இந்தத் தொடரின் வெளியீடு, இந்தியாவில் அமேஸான் பிரைம் வீடியோ தமிழ் மொழியில் அசல் உள்ளடக்கத்தை வழங்குவதற்கான முதல் முயற்சியைக் குறிக்கிறது, மேலும், இன்றுவரை வெளியிடப்பட்ட அனைத்து இந்திய அமேஸான் ஒரிஜினல்களிலும், இது நிச்சயமாக அதன் வெளியீட்டு தேதியின்றே கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகத் திகழ்கிறது!
 • பிரபலமான அமேஸான் அசல் தொடர் Comicstaanனின் தழுவல் இந்த நிகழ்ச்சி Comicstaanனின் முதல் இரண்டு சீசன்களின் தழுவலாகும். அது வழங்கிய உச்சபட்ச நகைச்சுவை நினைவில் நிற்கத்தக்கது மற்றும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல்வேறு வகையான நகைச்சுவை வகைள் ஆராயப்படவுள்ளன.
 • பிரபலமான நீதிபதிகள்:
  இப்புத்தம்-புதிய தொடரில், பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆறுமுகம் உள்ளிட்ட மிகவும் பிரபலமான மூன்று தமிழ் நகைச்சுவையாளர்களை நாம் பார்க்கவுள்ளோம். அவர்கள் அந்தந்த நகைச்சுவை வகைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் அத்தியாயங்களில், நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கு அவர்கள் வழிகாட்டுவார்கள்.
 • தொகுப்பாளர்கள் இடையிலான அற்புதமான நட்புறவு:
  உள்ளூர் தன்மையை மேலும் சேர்க்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை டைனமிக் இரட்டையர்கள் வித்யுலேகா ராமன் மற்றும் மெர்வின் ரோசாரியோ தொகுத்து வழங்குகிறார்கள். அவர்களின் ஜுகல்பந்தி, ஒருங்கிணைப்பு மற்றும் கலவையானது, மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த தமிழ் அமேஸான் அசல் தொடரின் நகைச்சுவை அளவை மேலும் ஒரு படி அதிகரிக்கும். எனவே, ஏன் காத்திருக்க வேண்டும்? இன்றே தொடரை முழுமையாகப்-பார்த்திடுங்கள்
 • போட்டியாளர் அபிஷேக் குமார் மிசஸ்.ஜானகி பாத்திரத்தின் வழியாக பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளார்
  நிகழ்ச்சியின் அறிமுகத்திற்கு முன்னதாக, போட்டியாளரும் பிரபல நகைச்சுவையாளருமான அபிஷேக் குமார் மிசஸ்.ஜானகி என்னும் ஒரு உள்ளுர் பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்தை உருவாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது நடப்பு விஷயங்கள் குறித்த விவரணைகள் நகரில் பெரும் வரவேற்ப்பினைப் பெற்றுள்ளன. இந்த நகைச்சுவை பொங்கும் வீடியோவை நீங்கள் தவறவிட முடியாது (இங்கே பாருங்கள்). செப்டம்பர் 11 முதல் முழு தொகுப்பையும் பார்க்க மறக்காதீர்கள்!