பெங்களூரில் தமிழ் இசைக் கலைஞர்களை தாக்கிய கன்னட அமைப்பினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


பெங்களூரில் மார்கண்டேயன் நகரில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற
கோவில் திருவிழா ஒன்றில் இசை கலைஞர்கள் தமிழ்ப்பாடல் பாடியதற்காக அங்குள்ள கன்னட ரக்ஷிக வேதிக அமைப்பினர்கள் ஆயுதங்களோடு வந்து இசை கலைஞர்களை
கண்மூடித்தனமாக தாக்கி இசை கருவிகள், ஒளி பெருக்கிகள் அனைத்தையும் சேதப்படுத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த அராஜக போக்கை கண்டித்து தாக்கபட்ட இசை கலைஞர்களுக்கு உரிய நிவாரணமும் சேதமான பொருட்களுக்கு இழப்பீடு வழங்கவும் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட கன்னட வெறியர்களை கைது செய்து தக்க தண்டணை வழங்கவும் கர்நாடக
அரசை வலியுறுத்தி தமிழ் மேடை இசை கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் 100க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அரசை கண்டித்தும் தமிழக அரசை வலியுறுத்தியும் நடைபெற்றது.