சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஜெய் மகா பாரத் கட்சியின் நிறுவனத் தலைவர் பகவான் ஸ்ரீ ஆனந்த விஷ்ணு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியதாவது

ஜெய் மகா பாரத் பார்ட்டி நான்கு முறை நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து உள்ளதாகவும் முதல் முறையாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் வருகிற தேர்தலில் போட்டியிட போவதாகவும் தெரிவித்தார்.

வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியா முழுவதும் இலவச கல்வி வழங்குவோம் இந்தியா முழுவதும் உள்ள அணைகளை இணைத்து விவசாயிகளுக்கு மற்றும் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் வழங்க வழிவகை செய்வோம் என்றும் இந்தியாவை உலகத்தில் முதன்மை மிக்க நாடாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம் என்றும்,இந்திய மக்கள் அமைதியாக வாழ சட்டம் ஒழுங்கை பாதுகாப்போம் என்றும் குறிப்பாக பெண்களை முன்னணி பாதையில் வழிநடத்தி செல்வோம் என்றும் பகவான் ஸ்ரீ ஆனந்த விஷ்ணு தெரிவித்தார்