சென்னை மக்கள் ராஜ்யம் கட்சியின் சார்பாக 74 வது சுதந்திர தின விழாவை தேசிய கொடி ஏற்றி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் ராஜ்ஜியம் கட்சி நிர்வாகிகள் மாநில பொதுச்செயலாளர் ஏ.பாபு மாநில பொருளாளர் ஜி. பரிமளா மாநில துணைதலைவர் எஸ்.எம்.கே. குமரன் மாநில செயலாளர் ராமு வடசென்னை மாவட்ட தலைவர் ஜெ.வரதன் மாவட்ட இளைஞரணி விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் வீரபோயர் இளைஞர் பேரவை
மாநில தலைவர் கோ. பாலசந்தர் சென்னை மாவட்ட தலைவர் ரவி மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி மாவட்ட பொருளாளர் வடிவேல் மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி முருகன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் நடராஜ் மாவட்ட பொருளாளர் சஞ்சய் செங்கற்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் தேவேந்திரன் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மாவட்ட பொருளாளர் மணிமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் வழக்கறிஞர் அணி சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை 07, ஆகஸ்ட் 2020: கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தா பாபு தலைமையில் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் அவர்களின் முன்னிலையில், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மூத்த வழக்கறிஞர் பிஏ மணி அவர்கள் மற்றும் சென்னை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

டாக்டர் கலைஞர் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தில், தென்சென்னை தெற்கு பகுதியில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்சென்னை தெற்கு பகுதி விருகம்பாக்கம் தொகுதி கலைஞர் நகர் வடக்குப்பகுதி 127வது வட்டத்தில் வட்ட செயலாளர் பொன்வர லோகு அவரின் இல்லத்தில் கொடி ஏற்றி கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ச்சியாக கோயம்பேடு சிவன். கோயில் நியூ காலனி


ஜெய் நகர் மற்றும் குலசேகரபுரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்றது மற்றும் கேயம்பேடு மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில் உள்ள மேட்டு குளத்தில் எஸ்.கிருபானந்தா.
வி.நீலாவதி, D.ராஜேஸ்வரி அவர்களின் ஏற்பாட்டில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவர்களுடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள், சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டு, பிறகு களபணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய பின்பு முதல்வரின் கொரோனா தடுப்பு திட்டங்களால், தொற்று பரவலை கட்டுபடுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி சர்மா நகரில் நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டும் மகாகவி பாரதிநகரில் வார்டு 37 பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் களபணியாளர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் கலந்து கொண்டு களபணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் .,

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.

சென்னையில் கடந்த 3 நாட்களில் கொரோனா பரவல் விகதம் குறைந்து உள்ளது.

கொரோனா பரவல் இரட்டிப்பு என்பது தற்போது 67 நாட்களுக்கு இடையே உள்ளது. 15 நாட்களில் இரட்டிப்பு ஆன பாதிப்பு தற்போது 67 நாட்களில் இரட்டிப்பாகும் நிலை உள்ளது.

கொரோனா பயம் போனவுடன் களபணியாளர்களுக்கு அளித்துவந்த ஒத்துழைப்பை மக்கள் தவிர்த்து வருகின்றனர். கொரோனாவை முழுவதுமாக தடுக்க மக்களின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியம்.

முதல்வரின் பல்வேறு கொரோனா தடுப்பு திட்டங்களால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகிறோம்.

கொரோனா நோயாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதுபோல தரமான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தற்போது தனிமைபடுத்தப்பட்ட பகுதி ஏதும் இல்லை.

கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் இரண்டாம் அலை வீசிவிடக்கூடாது என மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தநிகழ்ச்சியில் பெரம்பூர் பகுதி அதிமுக செயலாளர் ஜே.கே.ரமேஷ், வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணிச்செயலாளர் வியாசை து.சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

சென்னை எண்ணூர் கத்திவக்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகவும், முதல்வரின் இரு மொழி கொள்கைக்கு பெரும் வரவேற்பு உள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை எண்ணூர் கத்திவாக்கத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனம் இணைந்து எண்ணூர் ஆல் இந்தியா ரேடியோ நகரை சேர்ந்த 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்..,
”சென்னை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் நோய்த்தொற்றை கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 5,600 பேர் வரை தொற்றால் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்

சென்னையில் அதிகளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்கள் மூலமாக ஆரம்ப நிலையிலேயே கொரோனா கண்டறியபடுவதால் கொரோனா பரவலை தடுப்பது எளிதாக உள்ளது.

தமிழகத்தில் தினமும் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளில் 10 சதவிகித பாதிப்பு தான் தற்போது உள்ளது.

தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என அறிவித்த முதல்வரின் அறிவிப்பை அனைத்து கட்சியினரும் வரவேற்றுள்ளனர்.

கல்வி கொள்கையை ஆராய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கைக்கு பின்னர் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். தமிழக கல்வி முறையில் கட்டாய மொழி திணிப்பை எதிர்க்கிறோமே தவிர பிற மொழிகளைக் கற்பதில் எந்த தடையுமில்லை
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி,முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்திய அரசு கொண்டு வந்துவுள்ள புதிய கல்வி கொள்கை திட்டம் வரவேற்க கூடியது அனைத்து சிறப்பம்சங்களும் உடையதாக இருக்கிறது – மாநில பாஜக பொது செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்தார்.

சென்னை கோடம்பாக்கதில்
உள்ள  தென் சென்னை பாஜக அலுவலகத்தில்  சக்தி கேந்திரம் ஆய்வு கூட்டத்தில் கலந்துக்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார்.

பாராளுமன்றம் தொடங்கப்படத்தில் இருந்து 900 அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, அரசாணை வேறு, சட்டம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..

2 லட்சம் பேரிடம் கருத்து கேட்டு நிறைவேற்றப்பட்டது புதிய கல்விக் கொள்கை, கல்வியாளர்கள் பெரிதும் எதிர்பாத்த ஒன்று புதிய கல்விக் கொள்கை.

சுற்று சூழல் தாக்க மதிப்பீடு வரைவு, புதிய விஷயம் இல்லை. பசுமை தீர்பாயம் தீர்பின் அடிப்படையில் சுற்று சூழல் காக்க மதிப்பீடு பிறப்பிக்கப்பட்டுள்ளது,  இதை வைத்து அரசியல் செய்வது வேதனையளிக்கிறது.

தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி தேவை இல்லை என்ற வதந்தியை பரப்புகிறார்கள்,  அனுமதி பெற்றுதான் தொழிற்சாலை அமைக்க முடியும்.

பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசியவர் கைது செய்யபட்டிருக்கிறார்.
இந்து மதத்தை இழிவுபடுத்தும் திமுக, மீதும் வீரமணி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளதா ?இவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஏன் மறுக்கிறது.

தமிழக அரசு வலதுசாரி சிந்தனையார்களின் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதற்கு துணைபோகிறது என இவ்வாறு பேசினார்.

கொரொனா நோய்த்தொற்றின் காரணமாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை வந்து அரசு நிவாரணங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜர் தெரிவித்துள்ளார்

சென்னை தேனாம்பேட்டை மண்டலம் 9 க்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜர் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் இருந்து தேனாம்பேட்டை முன் உதாரணமாக திகழ்வதாகவும், மண்டலம் 9 க்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1987 தெருக்கள் உள்ளன என்றும் அதில் 741 தெருக்களில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மேலும் தேனாம்பேட்டை மண்டலத்தில் தொற்று உள்ளவர்கள் 16.5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தொற்று அதிகமாக காணப்பட்ட தேனாம்பேட்டை மண்டலம் தற்போது அதிலிருந்து மீண்டு ஒரு முன் உதாரணமாக தேனாம்பேட்டை மண்டலம் திகழ்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1000 களப் பணியாளர்கள் மற்றும் 200 சமூக ஆர்வலர்கள் சேர்ந்து ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொரொனா தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் வீடு வீடாக சென்று சோதனை செய்வது பாதுகாக்கப்பட்ட பகுதியில் சென்று ஆய்வு மேற்கொள்வது என தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தேனாம்பேட்டை மண்டலத்தில் 1134 சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் இதில் 77 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இதன் மூலம் சுமார் 2,557 பேருக்கு சோதனை செய்ததில் 793 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர் பெருமிதம் கொண்டார்.

அமைச்சர் பாண்டியராஜன் களப்பணியாளர்களிடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஜெஜெ நகர் பகுதிகளில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் களப்பணியாளர்களிடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் கூறும்போது

தண்டையார்பேட்டை பொருத்தவரை குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

நாங்கள் தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு பொறுப்பு ஏற்கும் முன் தொற்று அதிகம் பாதித்த மண்டலங்களில் முதல் இடமாக இருந்த தண்டையார்பேட்டை மண்டலம் இன்று தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்த சதவீதத்தில் கடைசி மண்டலமாக உள்ளது

நம்மைவிட அதிக மக்கள்தொகை கொண்ட மேற்கு வங்காளத்தை விட அதிக சோதனைகளாக 11 லட்சம் சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன

சென்னையில் இருக்கும் களப்பணியாளர்களை கௌரவப்படுத்த முதலமைச்சரிடம் பரிந்துரைப்போம் அவர்களின் பணி அளப்பரியது முதலமைச்சரே அவர்களை வாழ்த்தி ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்

தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

திருவொற்றியூர் மண்டலத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்பு அதிகாரி வர்கீஸ் அதிகாரிகளுடனும் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த

சென்னை மாநகரில் 149 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 19 சுகாதார மையங்களும் 4935 காய்ச்சல் மையங்களும் உள்ளன இதன் மூலம் 3 லட்சத்து 36 ஆயிரத்து 836 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர் இதில் 15119 பேருக்கு வைரஸ் தொற்று சோதனை நடத்தப்பட்டு அதில் 3 ஆயிரத்து 189 பேருக்கு நோய் தொற்று அறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் முன்கூட்டியே அவர்களை கண்டறிந்ததால் நோயிலிருந்து அவர்களை நாம் காப்பாற்ற முடியும் இந்த நோய் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை தமிழக முதல்வர் உயிர் காக்கும் மருந்துகளை தற்போது தமிழகத்திற்கு வாங்கி உள்ளார் நாம் விலகி இருந்து எச்சரிக்கையோடு இருந்தால் இந்த நோய் தோற்று வராது அப்படியே நோய்த்தொற்று வந்தாலும் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றால் நாம் பூரணகுணம் பெறலாம் மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியமாக உள்ளது இறப்பு விகிதம் இந்த மண்டலத்தில் சற்று அதிகமாக உள்ளது எங்களுக்கு கவலையாக உள்ளது வேறு பல நோய்கள் இருப்பதால் இந்த இறப்பு விகிதம் கூடுதலாக உள்ளதாக தெரிகிறது தற்போது இருப்பு விகிதத்தை ஜீரோ பிரசன்ட் ஆக மாற்ற நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் மருத்துவத் துறைக்கு சவாலான இந்த பணியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து வருகிறார்கள் சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப காவல் நிலையத்திற்கு வட்டாட்சியர் நியமனம் பொருளாதார நடவடிக்கையும் ஆரோக்கியம் இரு தண்டவாளங்கள் போன்றது அதனால்தான் சிறிது தளர்வுவகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் அம்மா உணவகங்களில் உணவு இலவசம் குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பு செய்வார்பொதுமக்கள் இந்த நோயை பார்த்து பீதியடையாமல் முன்னெச்சரிக்கையாக இருந்தால் வெகுவிரைவில் நாம் இந்த நோயில் இருந்து மீண்டு வரலாம் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்ததால் பல்வேறு நாடுகளில் இந்த நோய் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனர்

4 மாதம்தான் இந்த நோய்க்கு வீரியம் இருப்பதாக ஆய்வுகள் சொல்வது நமக்கு ஒரு ஆறுதலான செய்தி இ.பாஸ் பெறுவதில் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டினால் அதை சரி செய்து கொள்கிறோம் என கூறினார்

தொற்றுக்கு யார் காரணம் என விவாதம் செய்யும் நேரம் இது இல்லை கொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட வரதம்மாள் கார்டன் மற்றும் பராக்கா சாலையில் இயங்கி வரும் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்கள் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதகளில் களப்பணியாற்றும் தன்னார்வலர்கள், மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆலோசனைகளை கூறியபின் சித்தா மருத்துவ உபகரணங்களை வழங்கினார். மேலும் ஓட்டேரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த முதியவரின் உடலை அடக்கம் செய்த காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டு தெரிவித்தார்.

அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

உலக மக்களிடையே போராட்டத்தை ஏற்படுத்திய கொரோனா காட்டாற்று வெள்ளம் போல பரவி வருகிறது.

உலகளவில் 1 கோடி தாண்டி இருக்கும் நிலையிலும் முறையான மருந்து இல்லாததால் கொரோனா தடுப்பிற்காக சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 5 ஊரடங்கு மூலம் பூஜ்ய கொரோனா தொற்று பரவலாக இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருவிக நகர் மண்டலத்தில் இதுவரை 4387 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 1496 பேர் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை கவனித்து கொள்ள தன்னார்வலர்கள் மூலமாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

தன்னார்வலர்களின் உற்சாகத்திற்காகவும், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

திருவிக நகர் மண்டலத்தில் 50 மருத்துவ முகாம்களில் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நோய்தொற்று என்பது மிகபெரிய சவால் என்பதால் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம், வெளியே வந்தால் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும், கைகளில் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவி முன்னெச்சரிக்கையாக இருக்க பொதுமக்களுக்கு அரசு கோரிக்கையாக வைக்கிறது.

தொற்று ஏற்பட்டதற்கு யார் காரணம் என விவாதம் செய்ய வேண்டிய நேரம் இது இல்லை. மக்களை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் அரசு செயல்பட்டு வருகிறது.

பேரிடர் மேலாண்மை தடுப்பு துறை மூலம் கொரோனா பரவலை தடுக்கும் பணியில் வேகமாக செயல்பட்டு வருகிறோம்.

சித்த மருத்துவ முறைகளை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை பொதுமக்களிடம் எடுத்து சென்றுள்ளோம். தேவைக்கேற்ற பகுதிகளில் சித்த மருத்துவ முறைகளை சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம்.

உண்மையான சிகிச்சை மற்றும் கட்டாய தேவைகளுக்கு மட்டுமே ஊரங்கில் தளர்வு செய்து இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என தான் ஊரடங்கை பிறப்பித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இதில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, பாலகங்கா, கொரோனா தடுப்பு அதிகாரி அருண் தம்புராஜ் ஐஏஎஸ், மாவட்ட வருவாய் துறை அதிகாரி அருணா, ஜெயலட்சுமி ஐபிஎஸ், மண்டல அதிகாரி நாராணன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தலித் மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் சார்பில் நலத்திட்ட உதவி

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள் இதனிடையே நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது இதன் காரணமாக தலித் மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் சார்பில் சென்னை சூளைமேடு பகுதியில் இருக்கும் மக்களுக்கு 6ம் கட்டமாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி மளிகை, கையுறை சானிடைசர் அடங்கிய ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு
அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நெல்லை மணி அவர்கள் வழங்கினார்கள்
இவர்களுடன் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில்அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள்,ஏழைபொதுமக்களுக்கு அதன் தலைமையகத்தில் பெற்றுக்கொள்ள முன்னதாக அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது அதன் படி சமூக இடைவேளி விட்டு ஆண்கள், பெண்கள் இளைஞர்கள் வாங்கிச்சென்றனர் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்

டாக்டர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது

தென் சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதி கலைஞர் நகர் வடக்கு பகுதி 127வது வட்டத்தில் சின்மயா_நகர் குலசேகரபுரம் சிவன்_கோவில்_பகுதி மெட்டுகுலம் நியூ_காலனி கோயம்பேடு மற்றும் ஜெய்_நகர் ஆகிய பகுதியில் வட்ட கழக செயலாளர் பொன்_வர_லோகு அவர்கள் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

இவர்களுடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

தமிழக BJP சார்பாக, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள் இதன் ஒரு பகுதியாக தமிழக பிஜேபி சார்பில் ஊரடங்கில் பாதிக்க பட்ட ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து 57 வது நாளாக அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

இதில் தேசிய பொதுக் குழு உறுப்பினர் சிவலிங்கம் மண்டல தலைவர் மூர்த்தி டெல்லி கோபி
தொகுதி செயலாளர் வினோத் குமார் தொகுதி பொருளாளர் அருள்ஆனந்தம்

K.C. விநாயகம். புரூசோதம்மன்
மதன் குமார் கந்தசாமி வெங்கடேசன் பிரபு ரமேஷ் மகேஷ் வரி ஜெயலட்சுமி பலர் கலந்து கொண்டனர்.. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளி வெளிவிட்டு வாங்கிச்சென்றனர் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். MLA அவர்களின் ஆணைக்கிணங்க, வேளச்சேரி பகுதி கழக செயலாளர் M.சந்திரபோஸ்.M.A. அவர்கள் தலைமையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். MLA அவர்களின் ஆணைக்கிணங்க, தென் சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி கழகம் சார்பில் 179 வது வட்டத்தின் சார்பாக காந்தி சாலையில், அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறி பொருட்கள் மற்றும் சீருடைகள் மற்றும் கபசுரக் குடிநீர் வேளச்சேரி பகுதி கழக செயலாளர் M.சந்திரபோஸ்.M.A. அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.

உடன் தென்சென்னை தெற்கு மாவட்ட கழகப் பொருளாளர் அண்ணன் K.G.முரளி, மாவட்ட இளைஞரணி செயலாளர் K.விது பாலன், மாவட்ட மகளிரணி செயலாளர் N.K.வச்சலா, மாவட் மாவட்ட மாணவரணி செயலாளர் J.D.கார்த்திக், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் A.C.ரங்கசாமி, மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் M.சரளா, வேளச்சேரி பகுதி இணைச்செயலாளர் செந்தூர் சுரேஷ், வேளச்சேரி பகுதி துணைச் செயலாளர் அப்பு (எ) ஜெயசீலன், வேளச்சேரி இளைஞர் பாசறை செயலாளர் தரமணி சோ.சுரேஷ், வேளச்சேரி பகுதி அம்மா பேரவை தலைவர் பா.கோகுலகிருஷ்ணன்,வட்டக் கழக செயலாளர்கள்: M.சந்திரசேகர், N.பாலமுருகன், அடையார் வீரமணி, M.முத்துக்குமரன், N.ஜெயசீலன், V.சுப்ரமணியன், M.ராகுல் ஆனந்த், S.கதிர்வேல், E.செல்வகுமார், K.ஜெயகாந்தன், S.கிருஷ்ணமூர்த்தி, D.சந்திரசேகர், M.பாண்டியன், R.லோகேஷ், வழக்கறிஞர் J.ராஜசேகரன், D.முத்துக்குமரன், S.P.செல்வமணி, P.செந்தில், S.அஞ்சலி கோவிந்தம்மா, K.மோகனா, P.ராஜேஸ்வரி மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.