தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச் சங்கம் சார்பில் அற வழி நூதன போராட்டம்

சென்னை அண்ணாசாலை ஆக 13 : தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச் சங்கம் சார்பில் திருமண மண்டபங்களில் தமிழக அரசு 50 சதவிகித நபர்கள் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டியும் , இ -பாஸ் நடைமுறையை ரத்துசெய்ய கோரியும் . சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்தும், சுகாதாரமான முறையில் திருவிழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டியும், அறவழியில் நூதன போராட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் இச்சங்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இச்சங்கத்தின் செயலாளர் நேசமணி, ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தலைவர் ஆண்டனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு . தளர்வுகள் வேண்டி அனைத்து சங்க உறுப்பினர்கள் சார்பில் அனைத்து தபால் நிலையங்களிலும் ஒரு லட்சத்க்கும் மேல் அஞ்சல் அட்டைகள் மற்றும் கடிதங்கள் அனுப்பும் நூதன போராட்டம் நடத்தி பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.