சென்னை நிருபர்களுக்கு கொரோனா நிவாரண உதவி விநியோகம் டெல்ட்டா இன்ஜினியர்ஸ், சரவணா டிரேடர்ஸ் உரிமையாளர் சமூக ஆர்வலர் சந்தானம் வழங்கினார்.


சென்னை டெல்ட்டா இன்ஜினியர்ஸ் மற்றும் சரவணா டிரேடர்ஸ் உரிமையாளர் சமூக ஆர்வலர் சந்தானம் தனது தாயார் சாவித்திரி அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு பொதுச் சேவைகளை செய்து வருகிறார்.

குறிப்பாக முதியோர்களுக்கு அன்னதானம், ஏழை எளிய பொதுமக்கள் நிவராண உதவிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவிகள், அன்னதானம் உதவிபோன்ற பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

அதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு நிலையிலும், பொதுமக்களுக்கு தங்குதடையின்றி செய்திகளை அளித்திடும் பத்திரிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் அரிசி, 16 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்களை வழங்கினார்.