சென்னை பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு கட்டிடம் இடிக்கும் ஒப்பந்த ஏலத்தில் முறைகேடு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பீட்டர்ஸ் காலனி குடியிருப்புகளை இடித்துவிட்டு அதற்கு பதிலாக வணிக வளாகம் கட்டப்போவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

இதற்கான டெண்டர் கடந்த 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் முறைக்கேடுகள் நடந்திருப்பதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

அரசு பதிவுப்பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததார்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் வெறும் 13 ஒப்பந்ததாரர்களை மட்டும் பங்கேற்க செய்து
ரூ.90 லட்சம் மதிப்புள்ள டெண்டரை குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளனர்.

டெண்டருக்கு முன்னதாகவே டிசம்பர் 5 ஆம் தேதியில் இருந்தே கட்டிடங்களை இடிக்கும் பணி துவங்கி விட்டது.
டெண்டர் முறைக்கேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பேட்டி : ஆஷிக் ரஹ்மான்,ஒப்பந்ததார்