தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரு சக்கர வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு


சென்னை, ஜூன், 04: தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நோய் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் மாவட்ட அலுவலர் சையத் முகமது ஷா மற்றும் மாவட்ட துணை அலுவலர் பொன் மாரியப்பன் ஆகியோரின் தலைமையில் தி.நகர் ரங்கநாதன் தெருவில் 6 புதிய இருசக்கர வாகனத்தின் மூலம் கடைகளின் இருபுறமும் தீயணைப்பு துறையினர் மூலம் கிருமிநாசினி தெளிக்கபட்டது.

இதற்கான ஏற்பாட்டை தியாகராய நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் சிறப்பாக செய்திருந்தார்.