சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சேகர் என்ற 25 வயது வாலிபர் மேலும் ஒரு புதிய உலகசதனையை படைத்துள்ளார்

சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் இளையராம் சேகர் வயது 25 பெரம்பூரில் உள்ள கல்கி அரங்கநாதன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக ரூபி கன சதுர விளையாட்டில் உலக அளவில் இதுவரை நான்கு கின்னஸ் உலக சாதனைகளை படைத்துள்ளார், தற்போது இரண்டு வருடங்களாக பயிற்சி மேற்கொண்டு ஐந்தாம் கின்னஸ் சாதனையை இன்று நிறைவு செய்துள்ளார்.

2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் நான் அமெரிக்காவை சேர்ந்த அந்தோணி புரூக்ஸ் என்பவர் ஒரே மூச்சில் நீருக்குள் மூழ்கியவாரு 5 ரூபிக் கன சதுர புதிருக்கு தீர்வு கண்டு கின்னஸ் உலக சாதனை படைத்தார் தற்போது அந்த உலக சாதனைக்கு பயிற்சி மேற்கொண்டு அதனை முறியடித்துள்ளார்.

சுமார் ஆறு வருடங்களுக்கு எவரும் முயற்சிக்காத இந்த சாதனையை இன்று 6 ரூபிக் கன சதுர புதிருக்கு சுமார் 2 நிமிடம் 17 வினாடி ஒரே மூச்சில் தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார்.