Nerve Care Indian Perspective

நரம்பு பாதுகாப்பு மன்றம் 2018: 26%ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புற நரம்புக் கோளாறு என்பது ஒரு அதிகரித்துவரும் கவலைக்குரிய விஷயமாகும்

  சென்னையில் நடைபெற்ற மெர்க் நரம்பு பாதுகாப்பு மன்றத்தின் இரண்டாவது பதிப்பில் 100க்கும் மேற்பட்ட நகர வல்லுனர்கள் புற நரம்புக் கோளாறு குறித்து  கலந்துரையாடினர்

  உடல்நல கவனிப்பு தொழில் சார்ந்தவர்களுக்கு புற நரம்புக் கோளாறு குறித்த பல்வேறு அம்சங்கள் பற்றி சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது

   சென்னை, 2018 மே 18:,  ‘மெர்க் நரம்பு பாதுகாப்பு மன்றத்தின்’ இரண்டாவது பதிப்பில் உடலில் உள்ள நரம்புகள் பாதிக்கப் பட்டிருக்கும் அல்லது  சிதைவுற்றிருக்கும் ஒரு நிலையான புற நரம்பு கோளாறு (PN) சீர் செய்வது குறித்து சென்னையில் நடைபெற்றது.

இந்தியாவில், புற நரம்புக் கோளாறு அதிகரித்துவருகிறது;  Peripheral Neuropathy இருப்பது 10,000 பேர் கொண்ட ஒரு மக்கள் தொகைக்கு  5 முதல் 2400 வரை வேறுபடுகிறது என்று பல்வேறு சமுதாய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதர நோய்கள்,  மருந்து உட்கொள்ளுதல் மற்றும் வயது முதிர்வு செயல்முறையுடன் தொடர்புடைய இதர திரள் விளைவு  அதிகளவில் இருப்பதன் காரணத்தால் இளையோர் மக்கள்தொகையுடன் (2-8%)  ஒப்பிடும்போது முதியோர் மக்கள் தொகை அதிகம் (30-40%)  பாதிக்கப்பட்டுள்ளனர்.1,2,3

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற தலைமை பேராசிரியர் டாக்டர் A.V. சீனிவாசன் பேசுகையில், “இந்தியாவில், லேசான மற்றும் தொடர்ந்து வருத்தக்கூடிய அறிகுறிகளை புறக்கணித்தல் அல்லது நிலைமையை சுற்றி விழிப்புணர்வு இல்லாமை மற்றும் நோயாளிகள் மத்தியில் அதன் தொடர்புடைய ஆபத்துக்கள் ஆகிய காரணத்தால் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை அளவுள்ள PN  நேர்வுகள் மருத்துவர்களால் நோய் கண்டறியப்படாமல் போகின்றன. மேலும் கூடுதலாக, அடையாளம் கண்டு அதற்குரிய காரணம் எதுவும் இல்லாமலேயே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள நோயாளிகள் PNல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது சிகிச்சை அளிக்கக்கூடிய  மருத்துவருக்கு சிகிச்சையை  மேலும் சிக்கலாக்குகிறது. நோயின் காரணங்கள், சரியான நேரத்தில் நோய்கண்டறிதல்,  அதன் தாக்க விளைவு  மற்றும் மரண சிக்கல்கள்  ஆகியவைகளில் நோய் மோசமாக புரிந்துகொள்வது என்பது,  மருத்துவர்களுக்கு ஒரு சுமை ஏற்படுத்தக் கூடிய மற்றொரு தடை ஆகும்.  இந்த துறையில் நோய்த்தீர்வியல்  முன்னேற்றங்கள் இருந்த போதிலும், இந்த நோயின் உள்ளார்ந்த இயல்பு மற்றும் மருத்துவர்களிடையே வழிமுறைகள்/ கருத்து ஒற்றுமை இல்லாத காரணத்தால் சிகிச்சை பயனற்றுப் போகிறது,” என்றார்.”