அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள், சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டு, பிறகு களபணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய பின்பு முதல்வரின் கொரோனா தடுப்பு திட்டங்களால், தொற்று பரவலை கட்டுபடுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி சர்மா நகரில் நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டும் மகாகவி பாரதிநகரில் வார்டு 37 பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் களபணியாளர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் கலந்து கொண்டு களபணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் .,

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.

சென்னையில் கடந்த 3 நாட்களில் கொரோனா பரவல் விகதம் குறைந்து உள்ளது.

கொரோனா பரவல் இரட்டிப்பு என்பது தற்போது 67 நாட்களுக்கு இடையே உள்ளது. 15 நாட்களில் இரட்டிப்பு ஆன பாதிப்பு தற்போது 67 நாட்களில் இரட்டிப்பாகும் நிலை உள்ளது.

கொரோனா பயம் போனவுடன் களபணியாளர்களுக்கு அளித்துவந்த ஒத்துழைப்பை மக்கள் தவிர்த்து வருகின்றனர். கொரோனாவை முழுவதுமாக தடுக்க மக்களின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியம்.

முதல்வரின் பல்வேறு கொரோனா தடுப்பு திட்டங்களால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகிறோம்.

கொரோனா நோயாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதுபோல தரமான உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தற்போது தனிமைபடுத்தப்பட்ட பகுதி ஏதும் இல்லை.

கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் இரண்டாம் அலை வீசிவிடக்கூடாது என மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தநிகழ்ச்சியில் பெரம்பூர் பகுதி அதிமுக செயலாளர் ஜே.கே.ரமேஷ், வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணிச்செயலாளர் வியாசை து.சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.