Covid19 – மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் ஒரு சாலை நிகழ்ச்சி

ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நடத்தும் கிரேவி – வன்னை நிகழ்ச்சி, அண்ணா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பொதுமக்களிடையே கோவிட் 19 மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உறுவாக்கும் ஒருசாலை நிகழ்ச்சியை ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நிறுவனத்தின் தலைவர் Rtn. திருமதி. ருக்குமணி, சுரேட்டர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முதலில் சென்னை, அண்ணா நகர் வளைவு அடுத்து ரவுண்டானா மற்றும் திருமங்கலத்தில் 22.07.2020அன்று
காலை 8.20 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒப்புதழ் அளித்து நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக Rin. PGD ஐசக் நாசர் மாவட்ட கவுன்சிலர் RID 3232, கவுரவ
விருந்தினர் டாக்டர் N. கண்ணன் IPS கூடுதல் போலீஸ் கமிஷனர் போக்குவரத்து). கிரேட்டர் சென்னை மற்றும் சிறப்பு அழைப்பாளர் Rin. G. முருகேஸ், இயக்குனர் – சுற்றுசூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை RID 3232 ஆகியோர் பங்கேற்றனர்.

“கிரேஸி க்ரூ’ ஐந்து திருநங்கைகள் கொண்டு குழுவாகும். இவர்கட்குத்
தேவையான பயிற்சிகளை ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் வழங்கி, சாலைகளில் சாலை விழிப்புணர்வு செய்வது தொடர்பான பயிற்சிகளை அளித்து வருகின்றது. சிறப்பு சமிக்ஞைகள் வரும் போது பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவிற்கு ஏற்ப கைப்குறிகைகளின் மூலம் பொதுமக்களை ஈர்க்க வழிவகை செய்வர்.

மேலும் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் முகம் மற்றும் கைகைளை தூய்மை செய்தல் ஆகியவைகளின் அவசிகங்களைப் பற்றியும் இவர்கள் எடுத்துரைப்பர், பச்சை சமிக்ஞைகள் வரும் போது அவர்கள் போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு கட்டுப்பட்டு பொதுமக்களுக்கு
வழிவிடுவர்.

இதனை போன்றே தலைக்கவசம், சீட் பெல்ட் அணிதலின் அவசியம் பற்றியும் ஓர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.