தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் தீபாவளி சனிக்கிழமையன்று வருவதால் வழக்கமாக விடும் வெள்ளிக்கிழமை விடுமுறையை ஞாயிற்றுக் கிழமையன்று மாற்றி அறிவிப்பு

சனிக்கிழமை தீபாவளியை பொதுமக்கள் கொண்டாடும் வகையில் பசுமையான காய்கறிகள் உடனுக்குடன் கிடைக்க வெள்ளிக்கிழமை விடுமுறையை ஞாயிற்றுக்கிழமையன்று விட சங்கம் முடிவு செய்துள்ளது.

பொதுமக்கள் அவரவர் பகுதிகளில் இருக்கும் காய்கறி கடைகளில் வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வியாபாரிகள் மட்டும் கோயம்பேடு வணிக வளாகத்திற்கு வந்து காய்கறி வாங்க வேண்டும் என்றும் கண்டிப்பாக சில்லறை வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று கோயம்பேடு வணிக வளாக மொத்த காய்கறி விற்பனை வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் சி.டி.ராஜசேகர் தெரிவித்தார்.