சமையல்காரர் பணியிடத்திற்கான வேலையில் சேர்வதற்கு ரூ10 லட்சம் கேட்பதாக புகார்

திருவண்ணாமலை, பிப். 13: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலன் துறை விடுதியில் சமையல்காரர் பணியிடத்திற்கான விளம்பரத்தை பார்த்து பலர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

விண்ணப்பம் செய்தவர்களிடம் வேலை வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரி கதிர் சங்கர் கேட்டுள்ளார். எனவே அவர் மீது திருவண்ணாமலை ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்கள். மேலும் பாதிக்கப் பட்டோர் சென்னை எழிலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.