உயர் நீதிமன்ற நீதிபதி கொரனா தொற்று பாதிப்பில் இருந்து உடனடியாக மீண்டு வர வேண்டும் அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக பிரார்த்தனை

பிரார்த்தனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் சத்தியசீலன்

கொரனா தொற்று நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வழக்கறிஞர்கள் மட்டுமல்ல பொது மக்களுக்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது.

எனவே  அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பாக இன்று சென்னை உயர்நீதிமன்ற அருகில் மாபெரும் சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது

இதில் மூன்று மதத்தை சேர்ந்த மத குருக்கள் இங்கே வந்து பிரார்த்தனை செய்தார்கள் உடனடியாக தலைமை நீதியரசர் அவர்கள் பரிபூரண குணம் அடைந்து அவர் மீண்டும் நீதிமன்றப் பணிகளை தொடர்ந்து  செயல்படுத்த வேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை நாங்கள் பிரார்த்திக்கிறோம்

அவர் குணமடைய வேண்டி ஏழை எளிய மக்களுக்கு நாங்கள் அன்னதானம் வழங்கினோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்

எங்களது மரியாதைக்குரிய நீதியரசர் அவர்கள் உடனடியாக குணம் பெற வேண்டும் அது மட்டுமில்லாமல் எங்கள் தலைமை நீதிபதி கொரனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவே  தமிழக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்காக ஆணையிடுவது ஏற்கத்தக்கதல்ல நாங்கள் ஐகோர்ட்டு திறக்கப்பட வேண்டும் அதேபோல் சேம்பர் திறக்கப்பட வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களை நடத்தி கொண்டு இருந்தோம் ஆனால் எங்கள் தலைமை நீதிபதி அலுவலர் இப்போது குரானா  நோயால் பாதிக்கப்பட்டுள்ளர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என்றால் மிகவும் வருத்தமாக இருக்கிறது அதனால் தமிழக அரசு எந்த ஒரு காரணம் கொண்டும் குழந்தைக்கு குழந்தைகளின் நலம் காத்து அந்த பள்ளிகள் திறப்பதை தொடர்ந்து ஒரு இரண்டு மாதத்துக்கு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி போட வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றார்