Health & Medical Home Life & Styles News Public News

இன்றைய பரபரப்பான அவசர காலகட்டத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியம் என்பது மிக மிக கவனிக்கப்பட வேண்டிய தேவையாக உள்ளது.

எல்லாவற்றிலும் ஒரு அவசரமும் பதட்டமும் இருக்கும் நிலையில், நம்மால் நம் உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தினை நன்கு காப்பதன் மூலமாகவே நாம் அன்றாட வாழ்க்கையினை திறம்பட வாழ முடியும்.

 

 

மனதின் ஆரோக்கியம் என்பதற்கு சிறந்த வழி யோகா. இந்த யோகா தியானப் பயிற்சியின் மூலம் நம் உடல் மற்றும் மனதினை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஒரு நெறிமுறையான வாழ்க்கையினை வாழ முடியும். இந்த யோகா பயிற்சியினை பத்மப்ரியதர்ஷினி சிறப்பாக செய்து வருகிறார். இவரின் இப்பயிற்சியின் மூலம் பயனடைந்த பலர் வாழ்க்கையில் பல வெற்றிகள் கண்டு நிம்மதியான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த டிசம்பர் 24,25 2022 தேதியில் இத்தகைய யோகா பயிற்சி தெரபிஷ்ட் பத்ம பிரியதர்ஷினி அவர்களால் யோகதத்வா, திருக்கழுகுன்றத்தில் சிறப்பாக நடைபெற்ற முடிந்தது.

இப்பயிற்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வரம்பின்றி அனைவரும் கலந்து கொண்டனர். அப்படி கலந்து கொண்டு பயன் பெற்ற பலரின் கருத்துக்களை நாம் கேட்டபோது இப்ப பயிற்சி முறைகள், அது நடைபெற்ற சூழல், அதனை நடத்திய பத்மப்ரியதர்ஷினின் பாங்கு அனைத்தையும் மிக்க பாராட்டி இருக்கிறார்கள்.. இந்த யோகா பயிற்சியின் மூலம் நமது என்ன ஓட்டங்களை கட்டுப்படுத்தி, நம் செயல்களை நன்கு யோசித்துத் திறம்பட செய்ய பெரும் உதவியாய் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். யோகாவில் 12 கால அனுபவமிக்க பிரியதர்ஷினி, யோகா மூலம் பல உடல் உபாதைகளை நீக்கி உள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், யோகாவில் உடலுக்கு, மூச்சுக்கு, மனதுக்கு, வாழ்க்கை ஒழுக்கத்துக்கு, ஞானத்துக்கு என்று நிறைய பயிற்சிகள் விரவிக் கிடக்கின்றன. உடலை அசைக்காமல் பெரும் ஆனந்தத்தை அதிகாலையில் பெற முடியும். மூச்சின் சரியான பயிற்சியால் முழு மனமும் கைக்குள் இருக்கும். ஆசனங்களால் முழு உடலும் தயாராகி எதற்கும் ‘முடியும் முடியும்’ என்று சொல்லும்.

மனதில் வேலை செய்யக்கூடிய ஒரு பயிற்சி முறைதான் யோகா. ஒருவருக்கு மனம் சரியாக இருந்து விட்டால், எதையும் சரிசெய்து கொள்ளலாம். அது சரியில்லை என்றால், எது இருந்தும் பயனில்லை. யோகப் பயணத்தில் மன அமைதி ஏற்படும்போதே, எண்ணக் கூட்டங்களின் துரத்தல்கள் குறையும். சுயத்தையும் சுற்றத்தையும் சரியாகப் பார்க்கத் தொடங்கலாம். எங்கும் பரவிக் கிடக்கும் கோபத் தணல் சற்றே குறையத் தொடங்கும்.

யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி செய்யும் பயிற்சி. இதன் மூலம் மனதையும் உடலையும் இணைத்து ஆரோக்கியத்தை பெற முடியும். யோகாவின் சக்தியை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இதை அனுபவித்தால் தான் அதன் நன்மைகளை உணர முடியும்.

நோய்களைஅண்டவிடாமல் யோகா எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் என்ற கவலையை போக்கி, வயதாவதை தள்ளிப்போடுகிறது. உடலில், ரத்தத்தில் தேவையற்ற, கெட்ட கொழுப்பை அண்டவிடாமல் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

யோகா என்பது உடலை, மனதை ஒருங்கிணைத்து, தன்கட்டுப்பாட்டில் வைத்து, அனைத்துப்புலன்களையும் ஆளுமைகொள்கிறது. அத்துடன் சமுதாயத்தோடு ஒற்றுமையாக, அமைதியாக வாழச்செய்து, உடலுக்கும்மனதுக்கும் ஆரோக்கியத்தை அன்பளிக்கிறது. தொடர்ச்சியான யோகாசனப்பயிற்சிகளின்காரணமாகஉடலில்முறுக்குதன்மை (Stiffness) அறவே நீக்கப்பட்டு, நல்லவளைந்துகொடுக்கும்தன்மை (Flexibility) அதிகரிக்கிறது. முக்கியமாக முதுகு எலும்புகளின் தண்டுவடம், அனைத்து எலும்புகளின் இணையும்இடங்கள், தசைகள் நீட்டிச்சுருங்கி, வலுவடைந்து, உடலில்எந்தவிதமான வலிகள், வேதனைகள் இல்லாமல் வாழ உதவுகிறது.

பிராணாயாமத்தின் காரணமாக நுரையீரல் பலப்பட்டு அதிக ஆக்சிஜன் பெறப்பட்டு மூச்சுசீராக, சிறப்பாக, அதிக பலத்தோடு செயல்படுகிறது.இதயம் பலமடைந்து, உடலின் அனைத்து நரம்பு மண்டலங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறது. கர்ப்பத்தின் போது சிறந்த உடலமைப்பை பெற யோகா செய்ய வேண்டும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் இரத்த சோகை, முதுகு வலி, கால் வலி, செரிமானம் கெடுதல் போன்றவை சீரடையும். யோகா செய்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும் என்கிறார்.

Back To Top