இந்திய மாலுமிகள் நல அமைப்பு சார்பில் உலக மாலுமிகள் தினம் அனுசரிப்பு

சென்னை : இந்திய மாலுமிகள் நல அமைப்பு (INDIAN SEAFARERS WELFARE ORGANIZATION -ISWOT) சார்பில் WORLD MARITIME DAY உலக மாலுமிகளின் தின கொண்டாட்டடம் சென்னை கிண்டி அருகிலுள்ள, ராஜ்பவன் எதிரிலுள்ள ரமடா பிளாசாவில் இந்திய மாலுமிகள் நல அமைப்பு (ISWOT) சேர்மன் டாக்டர்.திரு.A.பாபு மைலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக முதலில் நடைபெற்றது இதில் கொச்சி துறைமுகத்தை சார்ந்த சேர்மன் திரு.சிரில் சி.ஜார்ஜ், சென்னை எம்.எம்.டி பிரின்ஸ்பல் ஆபிஸர் திரு.அஜித்குமார் சுகுமாரன், கேப்டன் சந்தோஷ்குமார், எம்.எம்.டி பிரின்ஸ்பல் ஆபிஸர்
காண்ட்லா, எம்.எம்.டி கொச்சி பிரின்ஸ்பல் ஆபீசர் திரு.அப்துல் கலாம் ஆசாத், கேப்டன் டானியல் ஜோசப் ஸ்வீடன், எச். எம். டி.இந்துஸ்தான் இன்ஸ்டிட் ஆப் மேரிடைம் டிரைனிங் சென்டரின் சி.இ.ஓ.ஸ்ரீ சஞ்சீவ் வக்கீல்,சென்னை லயோலா கல்லூரியின் இயக்குனர் டாக்டர்.மரிய பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியை இந்திய மாலுமிகள் நல அமைப்பு (ISWOT) துணைத் தலைவர் திரு.Fr. ஆண்டனி அவர்கள் இந்நிகழ்ச்சியை வரவேற்று தொகுத்து வழங்கினார்.

இந்தியாவில் உள்ள மாலுமிகள் எல்லோரும் நலம் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்திய மாலுமிகள் நல அமைப்பு- (ISWOT) என்கிற இந்த அமைப்பு பல சேவைகளையும், பல முன்னேற்றங்கள் செய்து வருகிறது. உலக அளவில் இருக்கின்ற, பயணித்து கொண்டு வேலை செய்து கொண்டிருக்கின்ற, அனேக மாலுமிகளின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த இந்திய மாலுமிகள் நல அமைப்பு (ISWOT) பல முன்னேற்றமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறது. இந்த அமைப்பின் தலைவராக திரு டாக்டர்.பாபு மைலன் அவர்கள் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

வேர்ல்டு மேரிடைம் என்கிற இந்த நிகழ்ச்சியில் இந்திய மாலுமிகள் நலனுக்காகவும், இந்திய மாலுமிகளுக்காக வேலைவாய்ப்புகளை தருகின்ற சிறந்த கம்பெனிகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கொரோனா இக்கட்டான கால கட்டத்தில் மக்களுக்கு பல உதவிகள் செய்த,பல சமூகசேவைகள் செய்த குறிப்பிட்ட சில கம்பெனிகளுக்கு அதற்கான விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி குறுகிய நேரத்திலும், சமூக விலகலை கடைப்பிடித்தும் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் அவர்கள் வாழ்த்து செய்திகளையும், ஜி.கே.வாசன் எம்.பி அவர்கள் வாழ்த்து செய்திகளையும் INTERNATIONAL LABOUR ORGANIZATION (ILO)
மாலுமிகள் பிரிவு திரு.வேகன் அவர்கள் வாழ்த்துகள் செய்திகளையும், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் அவர்கள் வாழ்த்து செய்திகளையும் வழங்கி இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தார்கள்.