100வது வட்ட கழக சார்பில் காவிரி நதிநீர் மீட்புப் போரட்ட வெற்றி விளக்க பொதுகூட்டம் அண்ணாநகர் பகுதி கழக செயலாளர் தசரதன் தலைமையில் நடைபெற்றது


காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்த மாண்புமிகு புரச்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் சிறப்பாக நடைபெற்று வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அண்ணா நகர் 100வது வட்ட கழக சார்பில் காவிரி நதிநீர் மீட்புப் போரட்ட வெற்றி விளக்க பொதுகூட்டம்  என்.எஸ்.கே நகரில் அண்ணாநகர் பகுதி கழக செயலாளர் தசரதன் தலைமையில் நடைபெற்றது தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தி நகர் சத்தியா முன்னிலை வகித்தார்

கழக செய்தி தொடர்பாளர் கோகுல இந்திரா, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா ஃபா க. பாண்டியராஜன் மற்றும் நடிகர் மற்றும் திரைபட இயக்குனர் ரங்கநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் முன்னாள் அண்ணா நகர் அம்மா பேரவை செயலாளர் உள்பட வட்ட மற்றும் கழக செயலாளர்கள் மற்றும் மகளிர்அணியினர்  திறளாக கலந்து கொண்டனர்