Education Home News Public News

கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் சேர்மன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியச் செயலாளர் எஸ்.ராஜசேகர் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் 500 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

சென்னை தியாகராயர் நகர் ஜி என் செட்டி சாலையில் அமைந்துள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, மக்கள் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர், நீதியின் குரல் நிறுவனர், அச்சமில்லை திரு.சி.ஆர்.பாஸ்கரன், ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.எஸ்.ஏ.என்.வசீகரன், நடிகர்கள் திரு.செந்தில், திரு.மன்சூர் அலிகான், தமிழ் நதி திரு.ஆதவன், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில தலைவர் திரு DSR.சுபாஷ், டிஎஸ்பி திரு.மார்ட்டின், மூத்த வழக்கறிஞர் திருமதி.தேன்மொழி, தொழிலதிபர் திரு.வெற்றிமாறன், திரு.ஜான், மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு.ஜெயச்சந்திரன், வழக்கறிஞர்.சிவசங்கரி ராஜசேகர் கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்கள், நண்பர்கள், ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பத்திரிகையாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் டாக்டர்.எஸ்.ராஜசேகர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ விருந்து உபசரிக்கப்பட்டது.

Back To Top