மக்கள் சாம்ராக்யம் கட்சியின் சார்பாக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடைபெற்றது


சென்னை மே-12

டிடிவி தினகரன் தங்களை போன்ற சிறு கட்சிகளை தங்கள் தேர்தல் கூட்டணியிலிருந்தும் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை எனவும் தங்கள் கட்சி நிர்வாகிகளை அவமானபடுத்தியதாகவும் மக்கள் சாம்ராஜ்யம் கட்சியின் தலைவர் தனசேகரன் குற்றசாட்டினார்.

மக்கள் சாம்ராக்யம் கட்சியின் சார்பாக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடைபெற்றது…

அப்போது பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் தனசேகரன்.

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் டிடிவி தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாகவும், ஆனால் அக்கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கூட்டணி தர்மத்திற்கெதிராக தங்களை பல்வேறு விதமாக அவமானப்படுத்தியதாகவும்,அனலக்கழித்ததாகவும் குற்றம் சாட்டிய அவர்.

இது குறித்து தலைமைக்கு தெரியப்படுத்தினாலும் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை எனவும்,

தாங்கள் மட்டும்ல்ல தங்களை போன்ற அக்கூட்டணியிலிருந்த சிறு கட்சிகளின் நிலையும் இது போன்று தான் இருந்தது என தெரிவித்தார்…