கொரொனா நோய்த்தொற்றின் காரணமாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை வந்து அரசு நிவாரணங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜர் தெரிவித்துள்ளார்

சென்னை தேனாம்பேட்டை மண்டலம் 9 க்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜர் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் இருந்து தேனாம்பேட்டை முன் உதாரணமாக திகழ்வதாகவும், மண்டலம் 9 க்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1987 தெருக்கள் உள்ளன என்றும் அதில் 741 தெருக்களில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மேலும் தேனாம்பேட்டை மண்டலத்தில் தொற்று உள்ளவர்கள் 16.5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தொற்று அதிகமாக காணப்பட்ட தேனாம்பேட்டை மண்டலம் தற்போது அதிலிருந்து மீண்டு ஒரு முன் உதாரணமாக தேனாம்பேட்டை மண்டலம் திகழ்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1000 களப் பணியாளர்கள் மற்றும் 200 சமூக ஆர்வலர்கள் சேர்ந்து ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொரொனா தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் வீடு வீடாக சென்று சோதனை செய்வது பாதுகாக்கப்பட்ட பகுதியில் சென்று ஆய்வு மேற்கொள்வது என தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தேனாம்பேட்டை மண்டலத்தில் 1134 சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் இதில் 77 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இதன் மூலம் சுமார் 2,557 பேருக்கு சோதனை செய்ததில் 793 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர் பெருமிதம் கொண்டார்.