முதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ளது வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் பகுதியில் கொரானா தடுப்பு பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு மேற்க்கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 4000 க்கும் மேற்ப்பட்ட நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர் மேலும்
தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஒரு நாளைக்கு 800 க்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்றார். மேலும்
தண்டையார்பேட்டை மண்டலம் கொரானா பாதிப்பில் தற்போது முதல் இடத்தில் இருந்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது
தண்டையார்பேட்டை மண்டலத்தில் 20 நாட்களுக்கு முன்பு 1908 இருந்தது தற்போது 1990 பேர் மட்டுமே கொரானா சிகிச்சை மேற்க்கொண்டு வருகின்றனர் என்றார் மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மொத்த பாதிப்பை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுகிறார் குணமடைந்தரவர்களின் எண்ணிக்கையை மறைக்கிறார் என்றும்
எதிர்க்கட்சி தலைவர் கணிணி முன்னால் இருந்து கொண்டு அறிக்கை அரசியல் செய்கிறார் ஆனால் முதல்வரும் அமைச்சர்களும் களத்தில் இறங்கி பணி செய்து கொண்டிருக்கிறோம் என்று குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர் ஊரடங்கு நமக்கு வெற்றிதான் முதல்வரின் வியூகம் வெற்றி அடைந்துள்ளது என்றும் முதல்வர் மக்களின் நலன் கருதி விலை உயர்வான மருந்துகளைக் கொள்முதல் செய்துள்ளார் இதன் மூலம் இறப்பு விகிதம் இன்னும் குறையும். மேலும் தற்போது தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் திமுகவுடன் இணைந்து கொரானா தடுப்பு களப் பணியாற்றுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை திமுகவினர் இணைந்து பணியாற்ற மறுக்கின்றனர் என்றார்.