Cinema Movies Entertainment Home Life & Styles News Public News

இயக்குநர் சஞ்சீவ் ஜெய்ஸ்வாலின் முந்தைய ஹிட் படம் ‘சூத்ரா- தி ரைசிங்’-க்கு புதிய ஆதரவு

அந்தத் திரைப்படத்தை பாபா பிளே ஓடிடி தளத்தில் 7 மொழிகளில் இயக்குநர் மீண்டும் வெளியிடுகிறார்

 

 

இயக்குநர் சஞ்சீவ் ஜெய்ஸ்வாலின் ‘கோட்டா – தி ரிசர்வேஷன்’ திரைப்படம் வெளியிடக் காத்திருக்கும் நிலையில், அவருடைய முந்தைய படமான தலித் சமூக கதையை அடிப்படையாகக் கொண்ட ‘சூத்ரா: த ரைசிங்’ மீண்டும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாதி, சமூக நிலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான இது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது. இதைக் கொண்டாடும் வகையில், ‘சூத்ரா: தி ரைசிங்’ திரைப்படம் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், குஜராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி ஆகிய 7 மொழிகளில் பாபா ப்ளே ஒடிடி தளத்தில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘கோட்டா- தி ரிசர்வேஷன்’ தலித் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்தத் திரைப்படமும் ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, வங்காளி ஆகிய 7 மொழிகளில் பாபா ப்ளே ஒடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளது. ‘பாபா ப்ளே’ என்பது பாபா சாஹேப் அம்பேத்கருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒடிடி தளமாகும். இது திரைப்படங்கள், வெப் சீரிஸ், இசை மூலம் பாபா சாஹேப்பின் கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘கோட்டா- தி ரிசர்வேஷன்’ உலகளாவிய விருது விழாக்களில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இது லண்டன் இன்டிபென்டன்ட் ஃபிலிம் விருதுகள், ஐரோப்பிய திரைப்பட விழாவில் விருது பெற்றது, அதே நேரத்தில் கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு பெற்றது.

அவருடைய முந்தைய திரைப்படமான ‘சூத்ரா தி ரைசிங்’ ஒரு தனித்துவமான கதை. சமூகத்தில் தலித்துகள் எதிர்கொள்ளும் தீண்டாமை, அநீதிகளை வெளிப்படுத்தியது. சூத்ரா திரைப்படம் மீது எழுந்துள்ள புதிய ஆர்வத்துக்கு, ஜெய்ஸ்வாலின் சமீபத்திய திரைப்படமான ‘கோட்டா – தி ரிசர்வேஷன்’ பெற்றுவரும் நேர்மறையான ஆதரவுக்கு காரணமாக இருக்கலாம். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் முன்னணி நிறுவனங்களில் சாதிவெறியால் தலித் மாணவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அநீதியை இந்தப் படத்தில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

“சூத்ரா திரைப்படம் மீண்டும் விவாதிக்கப்படுவதற்கான காரணம், சாதிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி இன்னும் சொல்லப்படாத கதைகளை தெரிந்துகொள்ள பார்வையாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகிறது” என்கிறார் சஞ்சீவ் ஜெய்ஸ்வால். ஷில்பா ஷெட்டி, மனோஜ் பாஜ்பாய் நடித்த ‘ஃபரேப்’, மனிஷா கொய்ராலா நடித்த ‘அன்வர்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் இவர். அதுல் குல்கர்னி, ராஜீவ் கண்டேல்வால் நடித்த ‘பிரணாம்’ படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தை BABA PLAY தளத்திலும் பார்த்து ரசிக்கலாம்.

Back To Top