சிலம்பம் போட்டியில் சியோன் தாமோ இன்ஸ்டியூடிட் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ், 20 சேர்ந்த 13 மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா

Chennai October 02, 2019:  திருச்சியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் சியோன் தாமோ இன்ஸ்டியூடிட் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ், குழுவை சேர்ந்த 13 மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழாவும் பரிசு வழங்கும் விழாவும் சென்னை ஆலந்தூரில் உள்ள தனியார் பள்ளியின் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை சியோன் தாமோ இன்ஸ்டியூடிட் ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது இந்த நிகழ்வில் அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் எஸ்.இராஜேந்திரன், அவர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினார் இந் நிகழ்வில் ஆக்டர் கருத்தம்மா புகழ் கரிகாலன். உலக பாடி பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் எம். அரசு, எம்.சின்னமருது ஏகே. தாமோதரன் ரெட்டியார் ஜெகன் லோகநாதன் பி பச்சையப்பன், டீ மயில்வாகனன். சிடிடிஇ மகளிர் கல்லூரியின் (hod) திருமதி ஆலிமா ஷாகிர, கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அணைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர் சங்கத்தின் தலைவர் லயன். எஸ். ராஜேந்திரன்

மாணவர்கள் மாவட்டத்தில் சாதித்ததை போல மாநில அளவிலும் சாதித்து உலக அளவிலும் பல சாதனைகளைப் புரிய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் குழந்தைகளின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்..