Cinema Movies Entertainment Home News Public News Television Web Series

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தல்

( சினிமா பி.ஆர்.ஓ. யூனியன்) தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இதில் என். விஜயமுரளி தலைவராகவும், ஆ.. ஜான் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

பொருளாளராக பி.யுவராஜ் துணைத்தலைவர்களாக கோவிந்தராஜ், வி.கே.சுந்தரும் இணைச்செயலாளர்களாக கே.செல்வகுமார், வெங்கட் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர்.

செயற்குழு உறுப்பினர்களாக ஆறுமுகம், பாலன், கிளாமர் சத்யா, வி. பி. மணி, மதுரை ஆர். செல்வம், முத்துராமலிங்கம், சரவணன், செல்வரகு, சுரேஷ்குமார் ஆகிய ஒன்பது பேர் தேர்வாகி உள்ளனர்.

தேர்தல் அதிகாரியாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சங்கர் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தார்.

TTPT UNION

Back To Top