Liver and Pancreatic Diseases National Conference at Stanley Government Hospital

இன்று (09.06.2018) சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் கணைய நோய்கள் குறித்த தேசிய கருத்தரங்கை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, அறுவை அரங்கத்தில் செய்யப்படும் உயர்மட்ட அறுவை சிகிச்சை நேரடி ஒளிபரப்பை பார்வையிட்டார். இதற்கு முன்னர், தேசிய கருத்தரங்கில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மருந்து நிறுவனங்கள் மற்றும் அதி நவீன அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் உபகரணங்களை பார்வையிட்டார்

இக்கருத்தரங்கில் மாண்புமிகு அமைச்சர் பேசியதாவது “அரசு ஸ்டான்லி மருத்துவம்னையில் இரைப்பை, குடல், கல்லீரல், மற்றும் கணைய நோய் பிரிவு 1987 ஆம் வருடமும் 5.03.1999 அன்று இரைப்பை, குடல், இரத்தக் கசிவு தடுப்பு மற்றும், கல்லீரல் கணைய நோய் சிகிச்சை மையம் இங்கு ஆரம்பிக்கப்பட்டது. இது 2005ல் இரைப்பை குடல் அறுவை சிகிச்சைக்கான இன்ஸ்டிடியுட்டாக மேம்படுத்தப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் ஐளுடீ 9002 தரச்சான்றிதழ் பெறப்பட்ட ஒரே மருத்துவதுறை இதுவாகும்

மூளைச்சாவு ஏற்பட்டவர்களை பராமரிப்பு செய்வதற்கான தனிப்பிரிவு, உலகிலேயே முதன் முறையாக இன்மையத்தில் 2009 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 219 உடல் உறுப்புகள் உயிருக்கு போராடிய நோயாளிகளுக்கு தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் திட்டத்தின் கிழ் தானமாக வழங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்லீரல் மாற்று ஆறுவை சிகிச்சை மூளைச்சாவு எற்பட்டவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் மூலம் செய்யப்படுவது ஆகும். இதுவரை 68 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இம்மையத்தில் செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே இது போல, அரசு மருத்துவமனையில் செய்யப்படுவது
இம்மையத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில் அரசு ஸ்டான்லி இரைப்பை, குடல், கல்லீரல், கணைய அறுவை சிகிச்சை பிரிவு தமிழ் நாட்டிற்க்கே முன்மாதிரியாக உள்ளது

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சிறந்த முறையில் நடை பெற வேண்டுமெனில் குறைந்தபட்சம் 2 வருட காலம் அதிக செலவில் வெளிநாடு களுக்கு சென்று பயிற்சி பெற வேண்டியுள்ளது. இதற்காக குலோபல் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குழுவின் தலைவரும் உலக புகழ் பெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் முகமது ரேலா அவர்கள் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டு குலோபல் மருத்துவமனையின் கல்லீரல் அறுவை சிகிச்சை குழுவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது

நாட்டில் முதன்முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இங்கு மேற்கொள்ளப்பட்டது. 24 மணிநேர சிறப்பு சிகிச்சைமையம் செயல்பட்டு வருகிறது. இச்சிகிச்சை மையத்தில் புதிப்பிக்கப்பட்ட அறுவை அரங்கு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் 11,01,2016 அன்று திறந்து வைக்கப்பட்ட பின் 25க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது

மேலும், தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனித வளம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.1,634 கோடி நிதி உதவியினை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (துஐஊஹ) வழங்க முன் வந்துள்ளது. தமிழ்நாடு சுகாதார திட்டம் -2 என்கிற புதிய சுகாதார திட்டத்தினை ரூ.2,685.91 தமிழக அரசு செயல்படுத்த உத்தேசித்து, அதற்கான திட்ட வரைவினை இந்திய அரசுக்கு சமர்பித்தது. அதனை உலக வங்கிக்கு இந்திய அரசு பரிந்துரை செய்து அனுப்பியுள்ளது. தமிழக அரசுடன் இணைந்து மேற்குறிப்பிட்ட திட்ட அறிக்கையை தயாரிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்