தமிழ்நாடு சிவசேனா – மதுக்கடைகள் திறக்க அனுமதித்த அரசு, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி மறுப்பது ஏன்?

தமிழ்நாடு சிவசேனா சார்பில் சிவசேனாவின் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு புரசைவாக்கத்தில் நடைபெற்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியது: சிவசேனா சார்பில் தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது இந்த விழா இந்துக்களின் நம்பிக்கை, ஒற்றுமை, எழுச்சியின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டத்தை பல கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் பல ஆண்டுகளாக திட்டமிட்டே குறைத்து வருவதாகவும், இது இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக கருதுபடுகிறது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சில விதிமுறைகளுடன் அனுமதிக்க வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்ததை மறுபரீசீலனை பண்ண வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். சிறு கோயில்கள் திறக்க அனுமதி அளித்ததைக் போன்று அனைத்து கோயில் தரிசனத்திற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கோவிலை திறக்க அனுமதிக்கப்பட்ட தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதன் மூலம் கொரோனா தொற்று உயிரிழப்புகள் மற்றும் சமூக அவல பிரச்சினைகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். பிரபல இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்களின் திடிர் மரணம் தொடர்பாக மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ்ஜு தாக்கரே அவர்களின் மஹா விகாஸ் அகாடி அரசின் நற்பெயரை சீர்குலைக்கும் விதமாக ஆளும் பா.ஜ.க அரசு முயன்று வருவதாக குற்றம் சாட்டினார்.

இந்த பேட்டியின் போது சிவசேனா நிர்வாகிகளான மாநில ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி சேதுபதி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, சென்னை மாநகர வழக்கறிஞர் அணி பிரிவுத் தலைவர் மணிவேல், சென்னை மண்டல தலைவர் சிவபிரபு, வடசென்னை மாவட்ட செயலாளர் செல்வா, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சக்திவேல், திருவள்ளூர் மாவட்ட தலைவர் குமார், தென் சென்னை மாவட்ட தலைவர் வெங்கடேசன், திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் மோனேஷ், தென்சென்னை மாவட்ட செயலாளர் பிரபு ,திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நாராயணன், திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் கலை வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனி ருந்தனர்.