அங்கன்வாடி பணி நியமனத்தில் முறைகேடு தமிழ் புலிகள் கட்சியினர் மனு

அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடுகளை கலைந்து அருந்ததியின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டி ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர்களிடம் அருந்ததியின தமிழ் புலிகள் கட்சியினர் மனு கொடுத்தனர்

அங்கன்வாடி மையங்களில் சமையல் பணியாளர்கள் வேலைக்கு 42 காலியிடங்கள் உள்ளது இந்த பணி நியமனத்தில் பெரிதும் லஞ்சம் பெற்றுக்கொண்டு நிரப்பப்படுகிறது எனவே இந்த முறைகேடுகளை களைந்து அருந்ததிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முறையாக நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அருந்ததியின மக்கள் இன் தமிழ் புலிகள் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இயக்குனரை சந்தித்து மனு கொடுத்தனர்