தமிழ் விவசாய சங்கம் ஜீலை 14ம் தேதி தென் மண்டல விவசாய மாநாடு தீர்மானங்கள் – கோவில்பட்டி


கோவில்பட்டி 14 ஜீலை 2018: விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய, விளைபொருட்கள் உற்பத்தி செலவில் 50% கூடுதல் லாபம் பெற, வேளாண்மைத்துறையில் உதவிகள் கிடைக்க போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தென்மண்டல விவசாயிகள் 2-வது மாநாடு  மந்தித்தோப்பு ரோடு சர்க்கஸ் மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைப்பெற்றது.

தலைமை: திரு. O. A. நாராயணசாமி (மாநில தலைவர்)சிறப்பு அழைப்பாளர்கள்: மாண்புமிகு உயர்திரு கடம்பூர் C. ராஜு (செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்), மாண்புமிகு உயர்திரு இரா. துரைக்கண்ணு (வேளாண்மைத் துறை அமைச்சர்), திரு. T. S. S. மணி (சமூக ஆர்வலர்), திரு. K. V. இளங்கீரன் (தலைவர், காவிரி டெல்டா பாசன கூட்டு இயக்கம்)

முன்னிலை: திரு. AVK பாலசுப்பிரமணிய நாடார் (மாநில துணைத் தலைவர்),  திரு. M. செளந்தரபாண்டியன் (மாவட்ட தலைவர் தெற்கு), திரு. PS காளிராஜ் (மாநில அமைப்பாளர்), திரு. R. கணேசன் (மாவட்ட தலைவர், விருதுநகர் தெற்கு), திரு. TS நடராஜன் (மாவட்ட தலைவர் வடக்கு),  திரு. N. ரெங்குதாஸ் (மாவட்ட தலைவர் விருதுநகர் வடக்கு)

  • கூட்டுறவு சங்கம் அனைத்து தேசிய வங்கிகளிலும் விவசாயிகள் நகை வைத்து தனி நபரிடம் கடன் வாங்கி திரும்பி மேலும் கடனாளிகளாக உள்ளார்கள் தள்ளுபடி செய்யப்படும் கடன்களில் விவசாயியின் வங்கிகளில் கடனை செலுத்திய தொகையை விவசாயியின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து தர வேண்டும். தமிழக அரசை தமிழ் விவசாய சங்கம் வேண்டிக்கொள்கிறது
  • வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரம் பூச்சி மருந்து, சலுகை விலையில் அனைத்து வேளாண் கிடங்குகளின் மூலம் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • அனைத்து கிராமப்புறங்களிலும் சாலை வசதிகள் செய்து பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பள்ளி மாணவ மாணவியர் அனைவரும் பயன்பெறும் வகையில் கிராமப்புற சாலைகளை தமிழக அரசு மேம்படுத்தி தரவேண்டும்.
  • தமிழக வேளாண்மை துறையின் விவசாயிகளுக்கு வரும் இலவச நலத்திட்டங்களை, ஆடு வளர்ப்பு நாட்டுக்கோழி வளர்ப்பு கறவை மாடுகள் வளர்ப்பு இந்த திட்டத்தை வேளாண்மைத்துறை அதிகாரிகள் அனைத்து கிராமங்களுக்கு . 
  • தெரியப்படுத்தி இந்த இலவச திட்டங்கள் நேரடியாக உண்மையான விவசாயிகளுக்கு போய் சேர வேண்டும். இதை தமிழக அரசு வேளாண்மை துறை அமைச்சர்கள் அவர்கள் நேரடி கண்காணிப்பில் வர வேண்டும் என இந்த மாநாடு வேண்டிக்கொள்கிறது.
  • விவசாய விளை பொருட்கள் பருத்தி கம்பு மக்காச்சோளம் உளுந்து பாசி போன்ற பயிர்களை தமிழக அரசு விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் இடைத்தரகர் இன்றி என தமிழக விவசாய சங்க வேண்டிக்கொள்கிறது

மற்றும் சில கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பாக இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை   பெற்றுக் கொண்டனர்.

இடம் : கோவில்பட்டி

நாள் : 14 – 07-2018