சென்னையில் தமிழ்நாட்டு விற்பனை பிரதிநிதிகள் நல சங்கம் சார்பாக கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் விஜிபி.சந்தோஷ் விஜிபி குழுமம், திரு மோகனகிருஷ்ணன் தலைவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், திரு ஆர்.பி. முருகன் ராஜ் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் இ. சவுந்தரராஜன் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம். இந்நிகழ்ச்சியின் தலைமை ஜிதேந்தர் ஒருங்கிணைப்பாளர் சென்னை மண்டலம், ஆல்வின் மனோ மாநிலத் தலைவர், முரளி மாநில செயலாளர், விஜயகுமார் மாநில பொருளாளர், கனகராஜ் மாநில துணை தலைவர் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சம் கொள்கைகளான ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிப்போம் நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கும் மேலும் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என பல கோரிக்கைகளை சங்கத்தின் சார்பில் மாநில அரசுக்கு தீர்மானமாக முன்வைத்தனர்.