தமிழக அரசு வருகின்ற 01-01-19 அன்று அமல்படுத்த விருக்கும் பிளாஸ்டிக் தடை சம்பந்தமாக தமிழ்நாடு ,பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது


தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கம் (TANPA), தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் (TAPMA), சென்னை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (CHEPMMA) ஆகியவற்றின் நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை ஜி.பி.சாலையில் உள்ள ஹோட்டல் சர்மணியில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்க தலைவர் ஜி.சங்கரன் தலைமை வகித்தார்.

TAPMA செயலர் ராக்கப்பன், TAPMA முன்னாள் தலைவர் சாமிநாதன்,செப்மா செயலாளர் டி.காமராஜ், இணை செயலாளர் நீலமலை, TANPA மற்றும் CHEPMMA மேலாளர்  அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் வருகிற ஜனவரி முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரவிருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்கக் கோரி பிளாஸ்டிக் கடைகளை மூடி போராடுவது, தடையை நீக்காத பட்சத்தில் அனைத்து வணிகர் சங்கங்கள்,அரசியல் கட்சிகளை கலந்தாலோசித்து மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது