தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை 35-வது வணிகர் தின விழா – தமிழர் தொழில் பாதுகாப்பு மாநாடு

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை 35-வது வணிகர் தின விழா தமிழர் தொழில் பாதுகாப்பு மாநாடு

நிகழ்ச்சி நிரலில் முதலில் கொடி ஏற்றுதல் நடந்தது, அதன் தொடர்ச்சியாக மாநாட்டு தீர்மானங்கள், கலை நிகழ்ச்சி, மதிய உணவு, கருத்தரங்கம், ஊக்கப் பரிசுகள், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, அதிர்ஷ்ட பரிசுகள் போன்ற பல நிகழ்ச்சியை அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

வழக்கம்போல், இந்த ஆண்டும் நமது தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை, வணிகர் தினத்தை அண்ணாச்சி அ.முத்துகுமார் தலைமையில் சிறப்பாக நடத்தது. “ஆண்டுதோறும் கடைகளுக்கு விடுமுறையளித்து விழாவை மன மகிழ்ச்சியுடன் நாம் கொண்டாடி வருவதை எல்லோரும் நன்கு அறிவீர்கள். இன்று (மே மாதம் 5-ந் தேதி, சனிக்கிழமை) 35வது வணிகர் தினம், வணிகர்களின் வரலாற்றில் சிறப்பு வாய்ந்த எழுச்சி தினம்”

விழாவில் அனைத்து மாவட்ட வியாபாரிகள், சங்க நிர்வாகிகள், வல்லுநர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

திரு. பிர்லா P.சிவலிங்கம் அவர்கள் கொடி ஏற்றி வைக்க.. முன்னிலை வகித்தவர்கள் திரு. A. ராஜ கோபால், திரு. S. திருமுகம், திரு. S. வேல்முருகன், திரு. M. ரவிச்சந்திரன், திரு. G. சுந்தர்சிங், திரு. P. ரவிந்திரன்.. கொடி ஏற்றி வைத்து சிறப்பித்தவர்கள் திரு. கா. கலைக்கோட்டுதயம்.. இனிப்பு வழங்கியவர் திருமதி. லட்சுமி காந்த்

பிறகு சிட்டு கலைக்குழு வழங்கிய தமிழர் பாரம்பரிய  கிராமிய கலை நிகழ்ச்சி ந் திரு. ப. ஜெயபாலன் தலைமையில் நடைப்பெற்றது

அதன் தொடர்ச்சியாக, வணிகர் சங்கத் தலைவர்கள் கருத்தரங்கம் GST வரி என்பது வணிகர்களை வாட்டி வைக்குமா? வாழ வைக்குமா? என்ற தலைப்பில் திரு. வியாசை. பால்ராஜ் தலைமையில் நடைப்பெற்றது

திருமதி. தேவிகா ஜெயபாலன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்ற, திரு. அ. முத்துக்குமார் தலைமை தாங்க, திரு. K. C. ராஜா வரவேற்புரை வழங்க, திரு. அமரத் D. பட்டேல் நன்றியுரை ஆற்றினார்

பிற்பகளில் உடன்குடி கந்தபுரம் ஜெ. ஜெயமுருகன் வழங்கிய ரம்யாஸின் டான்ஸ் டான்ஸ் சினி ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி (பவுல் வெரைட்டி ஷோ) திரு. த. பால்ராஜ் தலைமையில் நடந்தது

மாலை விருது வழங்கும் நிகழ்ச்சியில் திரு. க. சுந்தரேசன் தலைமை தாங்க, திரு. N. R. தனபாலன் விருதுகளை வழங்கினார், பிறகு வாழ்த்துரை வழங்கியவர் திரு. K. G. தியாகராஜன்

வாழ்த்துரை வழங்கியவர் மாண்புமிகு திரு. ப. பெஞ்சமின் (ஊரக தொழில்துறை அமைச்சர்), சிட்லப்பாக்கம் திரு. ச. இராஜேந்திரன், திரு. N. C. கிருஷ்ணன், திரு. G. M. சாந்தகுமார், திரு. S. A. விஜயராகவன், திரு. V. கோபாலகிருஷ்ணன்

விழா இடம்பெற்ற இடம்: செம்பாக்கம் நகராட்சி திடல், கிழக்கு தாம்பரம் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அரங்கம்.

நாள்: 05.05.2018, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைப்பெற்றது