Cinema Movies Entertainment Home News Public News

இருபது நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்பை முடித்த ” வாங்கண்ணா வணக்கங்கண்ணா ” திரைப்பட டீம்

Rock & Role production & A.P.Production ஆகிய நிறுவனங்களின் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் இருவரும் இணைத்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’.

இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சுந்தர் மஹா ஸ்ரீ ஹீரோவாக நடிக்கிறார். சந்தியா ராமசுப்பிரமணியன் ,அபினய ஸ்ரீ இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லியாக நதியா வெங்கட் நடிக்கிறார் . பிரபு ,சன்னி பாபு ஹீரோ நண்பர்களாக நடிக்கிறார்கள். மற்றும் பல பிரபலமான நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர்.

 

எழுத்து, இயக்கம் – ராஜ் கண்ணாயிரம், கதை, திரைக்கதை, வசனம் – சுந்தர் மஹாஸ்ரீ, ஒளிப்பதிவு – வெங்கட் முனிரத்னம் ,ஏ சி மணிகண்டன், ஸ்ரீநாத். படத்தொகுப்பு – ரமேஷ் மணி, இசை – ஜோஸப் சந்திரசேகர், நடனம் -ராஜ் கிரண் ,மாதவன் ,விஷ்ணு ராஜ்,

ஒலிப்பதிவு – சதீஷ் சாந்திவாசன், பத்திரிக்கை தொடர்பு – பா .சிவக்குமார்.

இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகிறது. முழுக்க முழுக்க காமெடியில் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 பாடல்கள் உள்ளன.

ஓரு எம்.எல்.ஏ.வுக்கும், ஓரு யூ டியூபருக்கும் இடையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டு எம்.எல்.ஏ.வின் கோபத்துக்கு ஆளாகிறார் யூ டியூபர். இந்தப் பிரச்சனையில் இருந்து இருபத்தி நாலு மணிநேரத்திற்குள் அந்த யூ டியூபர் தப்பினாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இருபது நாட்களுக்குள் இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பு நிறைவடைந்தது .

Rock and Role Production – Yasmeen Begam

AP production – Manimagali Lakshmanan

Hero – Sundar Mahasri (சுந்தர்மகாஸ்ரீ)

Heroines – Sandhiya Ramasubramanian, Abinaya sri.

Villan – Nathiya Venkat (வில்லி)

Hero Friends Prabhu, Sunny Babu

Director – Raj Kannayiram

Music Director – Joseph Chandrasekar

Editor – Ramesh Mani

Camera man – Venkat Munirathinam, A.C. Manikandan Srinath Rite

Dance Masters – Raj Kiran, Shafrin, Madhavan, Vishnu

Poster Designer – Selva

PRO – Siva

Back To Top