இந்திய அரசு கொண்டு வந்துவுள்ள புதிய கல்வி கொள்கை திட்டம் வரவேற்க கூடியது அனைத்து சிறப்பம்சங்களும் உடையதாக இருக்கிறது – மாநில பாஜக பொது செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்தார்.

சென்னை கோடம்பாக்கதில்
உள்ள  தென் சென்னை பாஜக அலுவலகத்தில்  சக்தி கேந்திரம் ஆய்வு கூட்டத்தில் கலந்துக்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார்.

பாராளுமன்றம் தொடங்கப்படத்தில் இருந்து 900 அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, அரசாணை வேறு, சட்டம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..

2 லட்சம் பேரிடம் கருத்து கேட்டு நிறைவேற்றப்பட்டது புதிய கல்விக் கொள்கை, கல்வியாளர்கள் பெரிதும் எதிர்பாத்த ஒன்று புதிய கல்விக் கொள்கை.

சுற்று சூழல் தாக்க மதிப்பீடு வரைவு, புதிய விஷயம் இல்லை. பசுமை தீர்பாயம் தீர்பின் அடிப்படையில் சுற்று சூழல் காக்க மதிப்பீடு பிறப்பிக்கப்பட்டுள்ளது,  இதை வைத்து அரசியல் செய்வது வேதனையளிக்கிறது.

தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி தேவை இல்லை என்ற வதந்தியை பரப்புகிறார்கள்,  அனுமதி பெற்றுதான் தொழிற்சாலை அமைக்க முடியும்.

பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசியவர் கைது செய்யபட்டிருக்கிறார்.
இந்து மதத்தை இழிவுபடுத்தும் திமுக, மீதும் வீரமணி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளதா ?இவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஏன் மறுக்கிறது.

தமிழக அரசு வலதுசாரி சிந்தனையார்களின் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதற்கு துணைபோகிறது என இவ்வாறு பேசினார்.