வளசரவாக்கம் “தி ஹெல்தி கிட்ஸ்” மழலையர் பள்ளி முன்னெடுத்த சிறந்த துப்புரவு பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா


சென்னை போரூரில் “தி ஹெல்தி கிட்ஸ்” மழலையர் பள்ளி வளசரவாக்கம் முன்னெடுத்த சிறந்த துப்புரவு பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா பள்ளியின் நிறுவனர் ம.செந்தில்உமையரசி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இணை நிறுவனர் உமையரசி வரவேற்றார். சுகாதாரத்துறை இணை ஆணையர் மதுசூதனன் ரெட்டி, மாநகராட்சி மண்டல அலுவலர் சசிகலா, பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் இயக்குநர் கு.செல்வகுமார், விண்டேஜ் நர்சரி இயக்குநர் தாரக் ராம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனர் மு.ராஜவேலு, அறம் மக்கள் நலச்சங்கம் சென்னை மாவட்ட தலைவர் ராகுல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தாண்டு சிறப்பாக பணிபுரிந்த 150 துப்புரவு பணியாளர்களுக்கு விருதினை ஊரக தொழில்த்துறை அமைச்சர் பி. பெஞ்சமின் வழங்கி பேசுகையில், துப்புரவு பணி என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதாக அமைகிறது. பணியாளர்களுக்கு அரசு வழங்கியுள்ள கையுறை மற்றும் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி பாதுகாப்புடன் பணி செய்ய வேண்டும்.

பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும். உங்கள் பணியால்தான் மக்கள் சுகாதாரமாக வாழ்கின்றனர் என்றார்.

காந்தியடிகள் பிறந்த தினத்தை போற்றும் வகையில்150 சுகாதார  பணியாளர்களுக்கு நகைச்சுவை நடிகர் செந்தில், நல்லக்கீரை ஜெகன் ஆகியோர் மரக்கன்றுகள், உடைகள், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினர். பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் வார்டு பகுதி மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், சுற்றுச்சூழவியலாளார் அமைப்பு  நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் சென்னை மெட்ரோ நண்பர்கள், பள்ளியின் மாணவ, மாணவியர், பெற்றோர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியை கிரேஸ் நன்றியுரை கூறினார்.