TNEBEF | தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் | கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் , தலைவர் S.மணிகண்டன், பொது செயலாளர் A. சேக்கிழார், பொருளாளர் J. லூர்து பாஸ்டின்ராஜ், செயல் தலைவர் K, செல்வராஜு, அமைப்புச் செயலாளர் S. இராமநாதன், இவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் 10,000க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு, எலக்டிரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் தலைவர் S. மணிகண்டன் தலைமையில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்.

27.09.2019 – ல் நடைபெற்றது. மாநில பொருளாளர் J , லூர்து பாஸ்டின்ராஜ், செயல் தலைவர் K . செல்வராஜ், அமைப்பு செயலாளர் S. இராமநாதன், பெடரேஷன் ஆலோசகர் R.ஜெயராமன் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 5000க்கு மேற்பட்ட கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பொதுச் செயலாளர் A. சேக்கிழார் கூறியதாவது. ‘மின்சார வாரியத்தில் 20,000க்கு மேற்பட்ட களப்பணியாளர்கள் பதவி காலியாக உள்ளது . பத்தாண்டுகளுக்கு மேலாக நிரந்தரமின்றி பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய மின்சார வாரியம் மறுக்கிறது. 05.01.98க்கு பிறகு ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லையென கட் ஆப் தேதி நிர்ணயிக்கிறார்கள்.

இந்த தேதியை 10.08.2007 என மாற்ற வேண்டும், 2008ம் ஆண்டு விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பட்டியல் கேட்டபோது 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தவர்களை Labour Inspector உத்தரவு ஆதாரமாக எடுக்கப்பட்டது. தற்போது Labour Inspector உத்தரவு அளிக்கக் கூடாதென மின்சார வாரியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது . இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக 480 நாட்கள் பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்திட வேண்டும்.

 

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செயதிட SE தலைமையில் கமிட்டி அமைத்து அடையாளம் காண வேண்டும். 2019ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்கிட வேண்டும். 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தவர்களுக்கு பணி நியமனம் செய்ய Labour Inspector மற்றும் High Court உத்தரவுகளை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்தி வேலை வழங்க வேண்டும். K2, Chit Agreement – ல் பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்சார வாரியமே நேரடியாக ஊதியம் ரூ . 380/- ( 22.02.2018 ஒப்பந்தப்படி ) வழங்கிட வேண்டும்.