Lion.Dr. P. சரவண சிவா அவர்கள் விழாவை துவக்கி வைக்க, புதிய தலைவராக Lion.Dr. B. இராமசாமி அவர்களும், செயலாளராக Lion Dr. N. சந்திரகுமார் அவர்களும்,, பொருளாளராக Lion.Dr. MP. அகத்தியர் அவர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். மேலும் ஏழை குழந்தைகளுக்கு பள்ளி படிப்புக்காக கல்வி உதவிகளும் செய்து, சேவை பணிகளை Dr. B.இராமசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும் பிரபல மருத்துவர் Dr. B. ராம்குமார் யாதவ் அவர்களும், சானையாளர் Lion.Dr. M. R. Soundararajan (சர்வதேச விளையாட்டு வீரர் மற்றும் எழுத்தாளர்) அவர்களும் அரிமா சேவை பணியில் தம்மை இணைத்து கொண்டார்கள்.

இந்த அமைப்பு பல ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் மற்றும் ஊக்கத்தொகையும் வழுங்கி வந்ததோடு மட்டுமல்லாமல் பல சமூக நலன்கள் சார்ந்த வழிகாட்டுதல்களையும் செய்து வருகிறார்கள். அதோடு உணவே மருந்து போன்ற மருத்துவ ஆலோசனைகளையும் செய்வதோடு மட்டுமல்லாமல் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தொடர்ந்து இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் முகாம்களின் மூலம் பெரும்பாலான மக்களுக்கு பயனுள்ள வகையில் எங்களது LIONS CLUB OF CHENNAI AAYUSH மூலம் செய்து வருகிறோம்.
