
சென்னையில் அதிக வாகனங்கள் சென்றுவரும் ஜி.என் செட்டி சாலையிலுள்ள கிரி சாலை தனியார் உணவகங்களால் கார் பார்க்கிங் ஏரியாவாக மாறியுள்ளது. இதுகுறித்து உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள ஜி.என் செட்டி சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் உள்ள “கிரி சாலை “ எப்போதும் போக்குவரத்து நெரிசலாக தான் இருக்கும்.
காரணம என்னவென்றால், கிரி சாலையில் மூன்று பிரபல தனியார் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தனியார் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்களின் கார்களை சாலை ஓரங்களில் ஆங்காங்கே, அதாவது சாலை வழியாக மற்ற வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல முடியாதபடி கார்களை நிறுத்தி விடுகிறாரகள். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட தனியார் உணவகங்கள் கண்டுகொள்வதே இல்லையாம்..!
காலை 12 மணி முதல் மாலை, இரவு நேரம் என எப்போதும் இந்த சாலை போக்குவரத்து நெரிசலாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் கார்களில் வெளியே சென்று வர முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
இந்த சாலையை கடப்பதற்கு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆவதாக மக்கள் வேதனை அடைகிறார்கள்.
சினிமா பிரபலங்களில், சின்னத்திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்கள் இந்த சாலையை பயன்படுத்தி தினமும் சென்று வருகிறார்கள். ஆனால் இதுகுறித்து போக்குவரத்து போலீசாகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்கள் பயன்படுத்தும் கிரி சாலையை தனியார் உணவகங்கள் பார்க்கிங் ஏரியாவாக மாற்றியுள்ளது கண்டனத்துக்குரியது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுத்து பார்க்கிங் ஏரியாவை அப்புறவுப்டுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை இப்படி கார் பார்க்கிங் ஏரியாவாக மாற்றியுள்ளதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது, மதியம் 12 மணிக்கு மேல் இந்த சாலையில் போக்குவரத்து சிரமமாக உள்ளதாகவும், இந்த சாலையை கடந்து செல்வதற்கு அரை மணிநேரத்துக்கு மேலாவதாகும் குற்றம் சாட்டுகின்றனர்.
மாதக் கணக்கில் உள்ள விவகாரம் குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தெரிந்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.