
சென்னையில் உள்ள இந்த 150வது மையம், மாநிலம் முழுவதும் அணுகக்கூடிய, உயர்தர நோயறிதல் மற்றும் முழுமையான நல்வாழ்வுக்கான நியூபெர்க் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
சென்னை, அக்டோபர் 4, 2025: உலகின் முன்னணி நோயியல் சேவை வழங்குநர்களில் ஒன்றான நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், சென்னை அபிராமபுரத்தில் அதன் புதிய ஆரோக்கிய மையம் மற்றும் செயலாக்க ஆய்வகத்தைத் திறப்பதாக இன்று அறிவித்தது. நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் GSK வேலு அவர்கள் முன்னிலையில் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் இண்டெர்வென்ஷனல் இருதய நோய் நிபுணர் டாக்டர் செங்கோட்டுவேலு G அவர்களால் இந்தப் புதிய வசதி திறந்துவைக்கப்பட்டது.
ஒரு முக்கிய குடியிருப்பு மையத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த அபிராமபுரம் வெல்னஸ் சென்டர், மிகவும் அணுகக்கூடிய, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் ஆக்கபூர்வமான உடல்நல பராமரிப்பு சேவைகளை வழங்குவதற்கான நியூபெர்க் நிறுவனத்தின் தொலைநோக்கை பிரதிபலிக்கிறது. தனிநபர்கள் தங்கள் ஆரோக்கியத்தை பேணுவதற்கு அதிகாரம் அளிப்பதில் நியூபெர்க் நம்பிக்கை கொண்டுள்ளது, மேலும் இந்த புதிய வசதி ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, மைலாப்பூர் மற்றும் அண்டை சமூகங்களில் வசிப்பவர்களுக்கு அவர்களின் வீட்டு வாசலிலேயே உலகத்தரம் வாய்ந்த நோயறிதல் மற்றும் ஆரோக்கிய தீர்வுகளை கிடைக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரத்த பரிசோதனை, விரைவான வீட்டு மாதிரி சேகரிப்பு, ECG, எக்ஸ்-ரே, அல்ட்ராசவுண்ட், கண் பரிசோதனைகள், வாழ்க்கை முறை மேலாண்மை திட்டங்கள் மற்றும் மருத்துவர் ஆலோசனைகள் போன்ற ஒரு பரந்த அளவிலான சேவைகளை வழங்குகின்ற இந்த மையம், விரிவான மருத்துவ சேவைகளை ஒரே இடத்தில் வழங்குகிறது. கூடுதலாக, வழக்கமான மற்றும் குறிப்பிட்ட சிறப்பு பரிசோதனைகளை உள்ளடக்குகின்ற இந்த வசதி தினசரி 1,000க்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதிக்கும் திறன் கொண்ட ஒரு அதிநவீன பரிசோதனை
ஆய்வகத்தையும் கொண்டுள்ளது. இதன் மூலம், நோயாளிகள் மற்றும் நிறுவன நல்வாழ்வு சேவை வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் விரைவான செயலாக்க நேரங்கள், அதிக வசதி மற்றும் மேம்பட்ட நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
நோயறிதல் தொடர்பு மையங்களின் வளர்ந்து வரும் வலையமைப்பை வலுப்படுத்துகின்ற இந்த தொடக்கத்தின் மூலம், நியூபெர்க் நிறுவனம் சென்னையில் தனது 150வது சேவை மையத்தின் இருப்பைக் குறிக்கிறது. இந்த நிகழ்வில் உரையாற்றிய நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் GSK வேலு கூறுகையில், “நியூபெர்க் நிறுவனத்தில், உலகத்தரம் வாய்ந்த நோயறிதல் மற்றும் தடுப்பு பராமரிப்பை ஒவ்வொரு சமூகத்திற்கும் எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள் தொலைநோக்காகும். அபிராமபுரம் வெல்னஸ் சென்டர் மூலம், சென்னையின் மிகுந்த பரபரப்பான குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றில் எங்கள் வரம்பை விரிவுபடுத்துகிறோம். அதிநவீன நோயறிதல் வசதிகள் மற்றும் ஒரு பரிசோதனை ஆய்வகத்துடன் கூடிய இந்த மையம், விரைவான பரிசோதனை முடிவுகளை செயல்படுத்துவது மட்டுமல்லாமல், தனிநபர்கள் தங்கள் ஆரோக்கியத்தை முன்னெச்சரிக்கையாக நிர்வகிக்கும் வகையில் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.”என்று கூறினார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மற்றும் இண்டெர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் செங்கோட்டுவேலு G கூறுகையில், “வாழ்க்கை முறை தொடர்பான மற்றும் இருதய நாள நோய்களின் இந்த அதிகரித்து வரும் சுமை, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்பு சிகிச்சையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் அபிராமபுரத்தில் இந்த நடவடிக்கையை எடுப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இது குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டு வாசலிலேயே விரிவான சுகாதார சேவைகளுக்கான அணுகலை வழங்கும். ஆரோக்கியமான சமூகங்களை வளர்ப்பதில் இத்தகைய முயற்சிகள் ஒரு நீண்ட தூரம் செல்லும்”என்றார்.