சிங்கப்பூரில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலக அக்வாட்டிக்ஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த தலைமைப் பயிற்சியாளர் அரவிந்த் நைனார் சிறப்பான சாதனை புரிந்துள்ளார்.
25 வயதுக்கு மேற்பட்ட நீச்சல் வீரர்களுக்கான உலகின் மிக உயர்ந்த மட்டப் போட்டியான இப்போட்டியில், சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அரவிந்த் நைனார், 200 மீட்டர் பின்னோக்கிய கைவீச்சு நீச்சல் பிரிவில் தன் திறமையை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்று, நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்துனர்.
