
அண்மையில் நடைபெற்று முடிந்த வங்கி பணிகளுக்கான போட்டித் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பதாக வெராண்டா ரேஸ் பயிற்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்நிறுவனத்தின் தலைவர் பரத் சீமான் கூறுகையில், தமிழகத்தில் அண்மைக்காலமாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக கூறினார்.
கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்திக்கு பிறகு நடைபெற்று முடிந்த வங்கிப்பணிக்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து இருப்பதாகவும் கூறினார்.
பேட்டி
பரத் சீமான்
வெராண்டா ரேஸ்
தொடர்ந்து பேசிய அவர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் ஓராண்டு முழுமையாக சரியான பயிற்சி பள்ளியில் சேர்ந்து பாடப்பிரிவுகளை திட்டமிட்டு படித்தால் நிச்சயம் அரசு பணிகளில் வாய்ப்பு பெற முடியும் எனக் கூறினார். எதிர்வரும் நாட்களில் அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் அறிவிப்புகள் வர இருப்பதாக கூறிய அவர், ரயில்வே துறையில் மட்டும் விரைவில் ஒரு கோடி காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாக இருப்பதாக தெரிவித்தார்.