அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு தலைவர் ரமேஷ் என்பவரின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அருகே ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்தில் இயங்கி வரும் காது கேளாதோர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அறுசுவையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்பட்டது , இதில் கூட்டமைப்பின் நிறுவனரும் தேசிய தலைவருமான ஹென்றி பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஹென்றி, தமிழக அரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் மூலம் பல கோரிக்கைகளை வைத்து வருகிறோம் ,சில கோரிக்கைகள் அரசின் மூலயமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது,
அதற்காக முதலமைச்சருக்கும் துறையின் அமைச்சருக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும்,மேலும் வலிமை சிமென்ட் நல்ல திட்டம் தான் ,ஆனால் அனைவருக்கும் சிமென்ட் கிடைப்பதில்லை,பிற நிறுவனங்களின் சிமென்ட்டை போலவே வலிமை சிமென்டிலும் நல்ல தரம் உள்ளது, ஆனால் பிற தனியார் சிமென்டுகளை போலவே விலையும் உள்ளது வருத்தமளிக்கிறது, எளிய மக்களும் வலிமை சிமென்டை வாங்க மலிவு விலையில் கிடைக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.