சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி பள்ளிக்கரணை 189 வது வட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
189 வட்டச் செயலாளர், மாமன்ற உறுப்பினர் வ.பாபு தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை சிறு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா. வேலு ,செய்தி தொடர்பு இணை செயலாளர் கான்ஸ்டன்ட்டைன் ரவிச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ,தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேராசிரியர் அன்பழகன் புகழைக் குறித்தும் அரசியல் சாதனைகளை குறித்தும் சிறப்புரை ஆற்றினார்கள்.
பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் கே.தேவேந்திரன், வே. வி. குமரேசன்,பி.கே. தங்கம், கு. வெற்றிவேல், ஏ.சந்திரசேகரன், சே. ஜெகதீசன், கே.ஆனந்தி, ஏ.வீரமுத்து, வி.குமார், கே.பாபு, வி.சீனிவாசன், மு.ஹரிஹரன், கு.சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார், 14வது மண்டல குழு தலைவர் எஸ். வி. ரவிச்சந்திரன், மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுகூட்டம் இறுதியில் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.