Home Life & Styles News Political News Public News

பௌத்தவியல் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா , பிக்குதானத்திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி பிரக்போதி அறக்கட்டளை சார்பாக சென்னை ICSA மையத்தில் நடைபெற்றது.

கர்நாடக நாளந்தா பௌத்த பல்கலைக்கழகம் தலைமை தொடர்பு அதிகாரி பிரமோத் நாராயண் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சிறும்பான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தமிழ்நாடு சிறும் பான்மை ஆணையம் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பிக்கு மெளரியார் புத்தா தொகுத்த “தமிழகம் தந்த பெளத்த பிக்குகள் ” நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்குகினார்கள்.

தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் துணைத் தலைவர் டி. மஸ்தான், சிறும்பான்மை ஆணைய உறுப்பினர்கள் பியாரிலால் ஜெயின், தமீம் அன்சாரி, முனைவர் போஸ்கோ, பாவீன்குமார் டாட்டியா ஆகியோர் இந்நூலைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும் ஒய்வுப்பெற்ற ஆவின் துணை இயக்குநர் வந்தவாசி எம்.மணி, தமிழ்நாடு சிறும்பான்மை பிரிவு செங்கற்பட்டு மாவட்ட உறுப்பினரும் அசோக புத்த விஹார் நிறுவனர் டாக்டர் அம்பேத்கர் குமார் (எ) ஏ. சி. குமார், டாக்டர் பீமாராவ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Back To Top